கருமேகம் வானில் திரிந்து இடிக்கும் காலை வேளையில் உன் வயவர் (வீரர்) யானை, குதிரை, தேர்ப் படைகளுடன் திரிகின்றனர்.
இரவில் பந்த வெளிச்சத்தைக் கையில் வைத்துக்கொண்டு உன் தோள்பிணி மீகையர் (தோள் கொடுக்கும் திணவு கொண்டவர்) கோட்டையில் ஏணி வைத்து ஏறத் திரிந்துகொண்டிருந்தனர். இப்போது கொல்லிமலைக் கோட்டையை நீ வென்றுவிட்டாய்.
பலாப்பழக் கள்ளைப் பருகாமல் காந்தள் மலர் சூடிய செல்வர் இரவலர்க்குக் கொடை வழங்கும் நாடு இந்தக் கொல்லிமலை.
பசும்பிடி மலர் சூடிய தன் கூந்தல், மின்னும் தன் மேனியை மறைக்க, கண்ணைக் காது வரை ஓட்டி உன்னைத் தேடிகொண்டிருக்கும் உன் மனைவி காணும்படி நீ உன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல உன் குதிரைகளைத் தேரில் பூட்டுக.
உன் பகைவர் உன்னை எண்ணி அஞ்சிப் போரிடாமல் பாதுகாப்பாக உறங்கட்டும். நீ உன் மனைவி தோளுக்கு விருந்தாகுக.
0
At dawn, while dark clouds roam the sky amidst rolling thunder, your warriors are on the move with their forces of elephants, horses, and chariots.
By night, your eager warriors—ready to lend their strength—once roamed, bearing torches and scaling the fortress walls with ladders; now, you have conquered the Kolli Hills stronghold.
This is the land of Kolli Hills, where the wealthy—adorned with *Kanthal* flowers and abstaining from jackfruit toddy—generously bestow gifts upon supplicants.
Harness your horses to the chariot and return to your homeland, so that your wife may see you—she whose tresses, adorned with fresh *Pidi* flowers, veil her radiant form, and whose eyes dart restlessly, reaching towards her ears as she searches for you.
Let your enemies sleep in safety, too fearful of you to engage in battle. Go now, and bring solace to your wife’s embrace.
0
ஒன்பதாம் பத்து பாட்டு - 81
உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளம்கெழு கமம்சூல்
அகல்இரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
கடும்சிலை கழறி விசும்(பு)அடையூ நிவந்து
காலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளக் 5
களிறுபாய்ந்(து) இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத்(து) இறுப்பினும் அதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மாஇரும் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் 10
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தம்குடி நிறுமார்
இடாஅ ஏணி வியல்அறைக் கொட்ப
நா(டு)அடிப் படுத்தலின் கொள்ளை மாற்றி 15
அழல்வினை அமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்பநின் தானை உதவி
வேறுபுலத்(து) இறுத்த வெல்போர் அண்ணல்
முழவின் அமைந்த பெரும்பழம் இசைந்து
சா(று)அயர்ந் தன்ன கார்அணி யாணர்த் 20
தூம்(பு)அகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்(கு) ஈயும்
சுரும்(பு)ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து 25
மின்உமிழ்ந் தன்ன சுடர்இழை ஆயத்துத்
தன்நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் அணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கின் நயவரப்
பெருந்தகைக்(கு) அமர்ந்த மென்சொல் திருமுகத்து 30
மாண்இழை அரிவை காணிய ஒருநாள்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூஎதிர்ந்து பெறாஅத் தாஇல் மள்ளரொடு
தொல்மருங்(கு) அறுத்தல் அஞ்சி அரண்கொண்டு 35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக
விருந்தும் ஆக நின்பெருந் தோட்கே. (81)
- பெயர்: நிழல்விடு கட்டி
- துறை: முல்லை
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - ஒன்பதாம் பத்து - இளஞ்சேரல் இரும்பொறையை, பெருங்குன்றூர்கிழார் பாடிய பத்துப் பாட்டு.
No comments:
Post a Comment