Pages

▼

Thursday, 8 October 2026

இளஞ்சேரல் இரும்பொறை Epilogue 9

பாட்டுடைத் தலைவன் : இளஞ்சேரல் இரும்பொறை
  • இவன் தந்தை : குட்டுவன் இரும்பொறை (பெருஞ்சேரல் இரும்பொறை)
  • தாய் : மையூர் கிழான் வேள் (மைசூர் சிற்றரசன்) மகள் ‘அந்துவஞ்செள்ளை’ 
  • பாடிய புலவர் :  பெருங்குன்றூர்கிழார்
  • பாடிய புலவர்க்கு அரசன் கொடுத்த பரிசு : "தெளிவு பெற்றவர் வியக்குமாறு நீ வழங்குக" என்று சொல்லி 32 ஆயிரம் காணம் பணம். புலவர்க்குத் தெரியாமல் அவருக்கென ஓர் ஊர், ஒரு வீடுவாசல், இன்புறும் ஆடை-அணிகள், மற்றும் பல நூறாயிரம் வெறுக்கை (புழங்கு பொருள்), மெய்காப்பாளர் முதலானவை.
  • 16 ஆண்டு அரசாண்டான்

செயல்பாடு 

  • இரு பெரு வேந்தரும், விச்சி என்னும் அரசனும் தோற்கும்படி ‘கல்லகம்’ என்னும் ஊரில் இருந்த ‘ஐந்தெயில்’ கோட்டையை அழித்தான்.
  • ‘பொத்தியார்’ புலவனை நண்பனாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சோழனை வென்றான்.
  • ‘வித்தை’ என்னும் ஊரை ஆண்ட ‘இளம்பழையன் மாறன்’ என்பவனை வென்றான். 
  • அவர்களின் சொல்வ வளங்களை வஞ்சி மாநகருக்குக் கொண்டுவந்து தன் குடிமக்களுக்கு வழங்கினான். 
  • மந்திரம் சொல்லும் மரபில் தெய்வத்தை வழிபட்டான். 
  • தன் மாமனார் மையூர்கிழானை அமைச்சனாக ஆக வைத்துக்கொண்டான். 
  • காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சதுக்கப்பூதர் சிலைகளைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து கால்கோள் விழா நடத்தினான். 

0

Protagonist of the poem: Ilamcheral Irumporai
  • His father: Kuttuvan Irumporai (Peruncheral Irumporai)
  • Mother: Anthuvanchellai (daughter of Maiyur Kizhan Vel / Minor ruler of Mysore)
  • Poet: Perunkunrur Kizhar
  • Gift bestowed by the king upon the poet: 32,000 *Kanam* of money, accompanied by the instruction, "Bestow this in a manner that leaves the wise in awe." Additionally—without the poet's prior knowledge—he was granted a village, a house, fine garments and ornaments, vast wealth (movable assets), and a personal bodyguard.
  • He ruled for 16 years.

Achievements

  • He destroyed the ‘Aintheyil’ (Five-walled) fortress located in the town of ‘Kallagam’, thereby defeating two great kings as well as the ruler named ‘Vichchi’.
  • He defeated Kopperunchozhan, who counted the poet ‘Pothiyar’ among his friends.
  • He defeated ‘Ilampazhaiyan Maaran’, the ruler of the town of ‘Viththai’.
  • He brought the wealth seized from them to the great city of Vanchi and distributed it among his subjects.
  • He worshipped the deity according to the tradition of chanting mantras.
  • He appointed his father-in-law, Maiyur Kizhan, as a minister.
  • He brought the statues of ‘Sathukka Boothar’ from Kaveripoompattinam to his own city and conducted the foundation-laying ceremony (*Kaalkol Vizha*).

0

ஒன்பதாம் பத்து - பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச்செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி, 
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந் திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறல் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு,    
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.

  • அவைதாம்:நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல் தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல், கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை. இவை பாட்டின் பதிகம்.
  • பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ
  • குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான். 

சங்ககாலப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்துக்கும் தொகுப்புரையாகப் பாடிய பதிகம் 


No comments:

Post a Comment