இடி போல் முரசம் முழங்க, வெள்ளைத் தந்தத்துடன் மலை போல் தோன்றும் யானைகளின் படையை நடத்துகிறாய்.
- சந்தனம் புலர்ந்த அகன்ற மார்பு, காப்பு அணிந்த வலிமை மிக்க கை, விழுப்புண் ஆறும் தோள், புடைக்கும் முறம் போலத் தவ்வும் துள்ளுநடை, போரில் முன் வைத்த அடியைப் பின் வைக்காத மனவுறுதி, எந்த நிலையிலும் மனம் உடையாத பூட்கை, கையில் வாள் - ஆகியவற்றைக் கொண்டவர் உன் பகைவர்.
அவர்களுக்கு முன் நின்றுகொண்டு "திறை கொடு; உன்னைக் காப்பாற்றுகிறேன்" என முழங்குபவனாக நீ விளங்குவாயாக.
- இப்படிப் போர் முகத்தில் புகழ் என்னும் தொலைந்து போகாத கற்பினை உடையவனே!
காற்றைப் போல் பாயும் குதிரைப் படையும், கொடி பறக்கும் தேர்ப் படையும் கொண்டு பகைவர் நிலத்தில் தோன்றுவதால் என்ன பயன்?
0
You lead an army of elephants—resembling mountains with their white tusks—amidst war drums resounding like thunder.
- Your adversaries possess broad chests where sandalwood paste has dried, powerful arms adorned with protective bands, shoulders bearing scars of valor, a spirited gait that bounds like a winnowing fan in motion, an unwavering resolve never to retreat once a step forward is taken in battle, an unshakeable steadfastness of mind, and swords held ready in hand.
May you stand before them and thunder the command: "Pay tribute, and I shall protect you."
- O you who possess the imperishable virtue of renown on the battlefield!
What is the use of appearing in enemy lands with cavalry that charges like the wind and chariot forces with flying banners?
0
எட்டாம் பத்து பாடல் 80 இதன் முந்தைய பதிவு
வால் மருப்பின் களிற்று யானை
மா மலையின் கணம் கொண்டு, அவர்
எடுத்து எறிந்த விறல் முரசம்
கார் மழையின் கடிது முழங்க;
சாந்து புலர்ந்த வியல் மார்பின், 5
தொடி சுடர் வரும் வலி முன் கை,
புண்ணுடை எறுழ்த் தோள், புடையல்அம் கழல் கால்,
பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை, ஒள் வாள்,
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று, உரைஇ,
'இடுக திறையே, புரவு எதிர்ந்தோற்கு' என, 10
அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ,
அனையை ஆகன்மாறே, பகைவர்
கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவிக்
கடும் பரி நெடுந் தேர் மீமிசை நுடங்கு கொடி,
புல வரைத் தோன்றல் யாவது சினப் போர், 15
நிலவரை நிறீஇய நல் இசை,
தொலையாக் கற்ப! நின் தெம்முனையானே?
- துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
- வண்ணம்:ஒழுகு வண்ணம்
- தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
- பெயர்: புண்ணுடை எறுழ்த் தோள்
பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - எட்டாம் பத்து - பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடிய பத்துப் பாட்டு.
No comments:
Post a Comment