பண்புகள்
- போரிடும்போது நீ உன் உயிரைப் போற்றுவதில்லை.
- இரவலர் நடுவில் இருக்கும்போது உன்னிடம் இருக்கும் பொருள்களை நீ போற்றுவதில்லை.
- பெரியோரைப் பேணுகிறாய்.
- சிறியவர்களுக்குக் கொடுக்கிறாய்.
உன்னேப் பிரியமாட்டேன்.
- பிரிந்தாலும் பிறரிடம் என் நாவால் எதுவும் கேட்கமாட்டேன்.
உன்னை அளக்க முடியவில்லை
- உன் ஆண்மை உலகில் உள்ளவர்களையெல்லாம் தேயச் செய்யும்.
- உன் மார்பு மகளிர் கோளில் குழையும்.
பகையரசன் யானை
- உன்னை நண்பனாக்கிக்கொள்ளாதவன் பட்டத்து யானையைக் கொன்று அதன் தோலை உன் முரசில் போர்த்திக்கொள்கிறாய்.
- அதன் தந்தத்தால் கால் செய்து உனக்கு இருக்கை ஆக்கிக்கொள்கிறாய்.
தெறிக்கும் குருதி
- தும்பை பூ சூடிப் பிறரைத் தாக்கும்போது தெறிக்கும் குருதி உன் மார்பில் பட்டால் ஒழிய நீ உணவு கொள்ளமாட்டாய்.
- அயிரை மலையில் (ஐயப்பன் மலை) நீ இருக்கிறாய்.
- உன் புகழ் நிலைக்கட்டும்.
0
Traits
- You do not cherish your life when in battle.
- You do not cling to your possessions when among supplicants.
- You cherish the elders.
- You give to the lowly.
I shall not part from you.
- Even if we were to part, I would not ask anything of others with my tongue.
You are beyond measure;
- Your valor would wear down all the people of the world,
- Yet your chest softens at the sight of women.
The Enemy King's Elephant
- You slay the state elephant of the king who refused your friendship and drape its hide over your war drum.
- You fashion a seat for yourself using its tusks as legs.
Spattering Blood
- You will not partake of a meal unless the blood spattered during battle—while you wear the *Thumbai* garland to attack your foes—falls upon your chest.
- You dwell upon the Ayirai Mountain.
- May your fame endure.
0
எட்டாம் பத்து பாடல் 79 இதன் முந்தைய பதிவு
உயிர் போற்றலையே, செருவத்தானே;
கொடை போற்றலையே, இரவலர் நடுவண்;
பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி;
நின்வயின் பிரிந்த நல் இசை கனவினும்
பிறர் நசை அறியா வயங்கு செந் நாவின், 5
படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப!
அனைய அளப்பு அருங்குரையை: அதனால்,
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து,
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென, 10
வில் குலை அறுத்து, கோலின் வாரா
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர்
அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில்மேல் இருந்து,
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து, 15
நிறம் படு குருதி புறம்படின் அல்லது,
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ,
கேடு இலவாக, பெரும! நின் புகழே!
- துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
- வண்ணம்:ஒழுகு வண்ணம்
- தூக்கு:செந்தூக்கு
- பெயர்: நிறம் படு குருதி
பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - எட்டாம் பத்து - பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடிய பத்துப் பாட்டு.
No comments:
Post a Comment