பெருஞ்சேரல் இரும்பொறை
- முரசு முழங்குவது போல இவன் நாட்டு அருவி ஒலிக்கும் மலையில் இவன் இருக்கிறான்.
- விறலியே நீ அவனிடம் செல்லலாம்.
- மகளிர் அவன் நாட்டு ஆறுகளில் பூக்கும் தாமரை, நெய்தல் மலர்களை அறுத்துக் கொண்டுவந்து விளையாடுவர். முல்லை நிலங்களில் கிளி ஓட்டுவர்.
- அவ்வூரின் காவல்-காட்டில் இருந்துகொண்டு போர்களில் வெற்றி பெற்ற ஆடவர் தம் வில்லாண்மைத் திறத்தால் ஊரைப் பாதுகாப்பர்.
- இந்தத் தகடூரை இவ்வரசன் சிதைத்தான்.
- இவன் ‘இயவர்’ (போராளிகள்) சிதைந்தோடும் காவலரைப் பின்தொடர்ந்து சென்று அழித்தனர்.
- அப்போது இவன் படையில் இருந்த குதிரைகள் தகடூர் நாட்டில் மேயும் ஆடுகளைப் போலவும், யானைகள் அந்நாட்டில் மேயும் மாடுகளைப் போலவும் மிகுதியாக இருந்தன.
0
Peruncheral Irumporai
- He resides in a mountainous land where the waterfalls resound like the beating of a war drum.
- O *Virali* (female bard), you may go to him.
- Women in his land gather and play with the lotus and *neithal* flowers that bloom in the rivers; in the *Mullai* (pastoral) tracts, they drive away parrots.
- Tagadur is a region of forests; warriors stationed in the town's defensive woodlands protect the settlement through their exceptional archery skills.
- This king devastated Tagadur.
- His warriors pursued and destroyed the defending troops as they fled in disarray.
- At that time, the horses in his army were as numerous as the sheep grazing in the land of Tagadur, and his elephants were as plentiful as the cattle grazing there.
0
எட்டாம் பத்து பாடல் 78 இதன் முந்தைய பதிவு
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம்
அவ் வெள் அருவி உவ் வரையதுவே
சில் வளை விறலி! செல்குவை ஆயின்,
வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து,
மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, 5
கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல,
பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின்,
வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
வில் பயில் இறும்பின், தகடூர் நூறி,
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் 10
ஓடுறு கடு முரண் துமியச் சென்று,
வெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு
யாடு பரந்தன்ன மாவின்,
ஆ பரந்தன்ன யானையோன் குன்றே.
- துறை:விறலி ஆற்றுப்படை
- வண்ணம்:ஒழுகு வண்ணம்
- தூக்கு:செந்தூக்கு
- பெயர்: பிறழ நோக்கு இயவர்
பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - எட்டாம் பத்து - பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடிய பத்துப் பாட்டு.
No comments:
Post a Comment