Pages

▼

Wednesday, 7 October 2026

கொங்கர் ஆ பரந்து அன்ன Like the cows of the Kongar grazing 77

வழியில் செல்லும் புதியவர்களே!
  • பெருஞ்சேரல் இரும்பொறை அரசனின் படை எவ்வளவு பெரியது என்று வினவின், போரில் பிணத்தின்மீது துணங்கைக் கூத்து ஆடிக்கொண்டு செல்லும் தேர், குதிரை, வீரர் ஆகியோரை  எண்ண என்னால் முடியவில்லை. 
  • கொங்கரின் ஆனிரைக் கூட்டம் ஈரமுள்ள முரம்பு நிலத்தில் மேய்வது போல் அவனது யானைகள் கட்டுத்தறியில் நிற்காமல் செல்கின்றன. 
  • மேலே பறக்கும் பருந்து நிழலை ஆள் என்று எண்ணி மிதித்துத் துவட்டிக்கொண்டு செல்கின்றன. 

0

O wayfarers!
  • If you ask about the magnitude of King Peruncheral Irumporai’s army—I cannot even count the chariots, horses, and warriors that advance, performing the *Thunangai* dance amidst the corpses on the battlefield. 
  • His elephants move restlessly, refusing to stay tethered to their posts, much like the herds of the Kongar people grazing on the moist, gravelly plains; they trample and crush the shadows of kites flying overhead, mistaking them for human figures.

0

எட்டாம் பத்து பாடல் 77    இதன் முந்தைய பதிவு

'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?'
என்றனிர் ஆயின்   ஆறு செல் வம்பலிர்!
மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய,
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்,               5
பண் அமை தேரும், மாவும், மாக்களும்,
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே;
கந்து கோளீயாது, காழ் பல முருக்கி,
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி,
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர்               10
ஆ பரந்தன்ன செலவின், பல்
யானை காண்பல், அவன் தானையானே.       

  • துறை:உழிஞை அரவம்
  • வண்ணம்:ஒழுகு வண்ணம்
  • தூக்கு:செந்தூக்கு
  • பெயர்:வென்று ஆடு துணங்கை 

பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - எட்டாம் பத்து - பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடிய பத்துப் பாட்டு. 


No comments:

Post a Comment