Pages

▼

Wednesday, 7 October 2026

உழும் மண்ணில் மணிக்கல் Gemstones in the soil being tilled 76

மணிக்கல்

  • காற்றுடன் மழை பொழிந்திருக்கும்போது, உழவர் விதைத்து நிலத்தை உழுவர். அவர்கள் துவைத்து உலர்த்திய வெள்ளைத் துணி போன்ற  பகன்றை மலரைச் சூடுவர். உழும் மண் புரளும்போது அவர்களுக்கு மணிக்கற்கள் கிடைக்கும். இப்படிப்பட நாட்டுக்கு உரியவன் பெருஞ்சேரல் இரும்பொறை. 

கடிப்பால் முரசு முழக்கும் போர்த் துறை

  • பகைவர் யானை, வேல், வாள் படையுடன் தாக்கும்போது, முரசு முழக்கத்துடன் அவர்களை வென்றாய். 

கடல் நீந்திய மரம் 

  • கப்பல் மரத்தில் சென்று பல்வேறு பண்டங்களைக் கொண்டுவரும் தொழிலாளி போல, நீ அவர்களின் யானைகளைக் கொண்டுவந்தாய். உன்னிடம் வந்து கேட்டவர்க்கெல்லாம் அவற்றை வழங்கினாய். மற்றும் உன்னிடம் இரப்பவர்க்கெல்லாம் நீ ஈவதில் தடை நிகழ்வதே இல்லை. இதனைப் பார்த்துவிட்டுப் போகவே நான் இங்கு வந்திருக்கிறேன். 

0

Gemstones

When rain falls accompanied by the wind, farmers plough the land and sow seeds. They adorn themselves with *Pahandrai* flowers, which resemble washed and dried white cloth. As the soil turns over during ploughing, they discover gemstones. Peruncheral Irumporai is the ruler of such a land.

The battlefield where war drums resound

You vanquished the enemy—who attacked with elephants, spears, and swords—amidst the resounding beat of war drums.

The Tree That Sailed the Seas

Like a merchant who travels by ship to bring back various goods, you brought back their elephants. You bestowed them upon everyone who came and asked of you; indeed, there is never any hindrance to your generosity toward those who seek from you. I have come here solely to witness this.

0

எட்டாம் பத்து பாடல் 76    முந்தைய பதிவு

களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து,
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று,
முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி,
பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்
பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ,         5
பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி,
இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை
கண்டனென் செல்கு வந்தனென்  கால்கொண்டு,
கருவி வானம் தண் தளி சொரிந்தென,              10
பல் விதை உழவின் சில் ஏராளர்
பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்,
கழுவுறு கலிங்கம் கடுப்ப, சூடி,
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே!         15

  • துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
  • வண்ணம்:ஒழுகு வண்ணம்
  • தூக்கு:செந்தூக்கு
  • பெயர்: மா சிதறு இருக்கை 

பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - எட்டாம் பத்து - பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடிய பத்துப் பாட்டு. 


No comments:

Post a Comment