Pages

▼

Friday, 9 October 2026

நிலம் தரு திருவின் நெடியோன் 82

இந்தச் சேரன் ‘நிலம் தரு திருவின் நெடியோன்’ எனப் போற்றப்படுகிறான். 
  • (திருமால் நிலம் அளந்த நெடியோன்)
  • (இவன் தன் நாட்டை விரிவு படுத்திய நெடியோன்)
செல்வ வளம், செவ்விய நடத்தை. சான்ற குணம், போரிடும் மறம் - ஆகியவற்றை இவன் கொண்டவன். 
  • இவனைப் பாடுபவர்கள் இவனிடமிருந்து எவ்வளவுதான் செல்வத்தைக் கொண்டு சென்றாலும் இவன் செல்வம் குறையாமல் வரவு பெருகிக்கொண்டே இருக்கும். 
  • போரில் வீரர் எத்தனைப் பேர் இறந்தாலும் இவன் படையின் அளவு குறைவதில்லை.  

போர்க் கூடத்தில் இருக்கும் இவன் தெய்வமோ என்று எண்ணத்தக்க பகைவர் படையை அழித்தான். 
  • இவனது களிறுகள் சினத்துடன் போரிட்டு, பகைவரை வென்ற பின்னர், தன் பெண்யானைகளைத் தழுவிக்கொண்டு நடக்கின்றன.
  • இவனது படைவீரர் பகைவீரர்களைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கின்றனர். 
  • தேர்ப்படையின் கொடி பறக்கிறது. 
  • தோல்படையின் முழக்கம் கேட்கிறது. 
பகைவரின் காவல் காட்டில் இவன் தங்கியிருக்கிறான்.
 
பெரும!
  • நீ இங்கு இப்படி இருப்பதால், இங்கேயே உன்னைக் காண வந்துள்ளேன் - என்கிறார் புலவர்.    

0

This Chera king is hailed as "the tall one of the Goddess of Prosperity who grants land."
  • (Thirumal is the tall one who measured the earth.)
  • (He is the tall one who expanded his kingdom.)
He possessed abundant wealth, noble conduct, exemplary character, and martial valor.
  • No matter how much wealth those who sang his praises took from him, his riches never dwindled; instead, the inflow of wealth kept increasing.
  • Even when many warriors perished in battle, the size of his army never diminished.
He has destroyed the enemy forces—an army so formidable that one might mistake him for a god as he stands upon the battlefield.
  • His male elephants, having fought furiously and vanquished the enemy, now walk alongside the female elephants, embracing them.
  • His warriors relentlessly harass the enemy troops.
  • The banners of the chariot corps are fluttering.
  • The resounding clamor of the forces echoes through the air.
He is encamped within the enemy's defensive forest stronghold.

O Great One!
  • Since you are here, I have come to this very place to see you—says the poet.

0

ஒன்பதாம் பத்து பாட்டு - 82    இதன் முந்தைய பதிவு

பகைபெரு மையின் தெய்வம் செப்ப
ஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல்சமம் தொலைத்த வினைநவில் யானை
கடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்தி     5
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயல
மறவர் மறல மாப்படை உறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
இன்ன வைகல் பல்நாள் ஆகப் 10
பாடிக் காண்கு வந்திசின் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்(து) அசையா நல்லிசை    15
நிலம்தரு திருவின் நெடியோய் நின்னே. (82)

  • பெயர்: வினைநவில் யானை
  • துறை: முல்லை
  • வண்ணம்: ஒழுகுவண்ணம்
  • தூக்கு: செந்தூக்கு

பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - ஒன்பதாம் பத்து - இளஞ்சேரல் இரும்பொறையை, பெருங்குன்றூர்கிழார் பாடிய பத்துப் பாட்டு. 


No comments:

Post a Comment