Pages

▼

Friday, 9 October 2026

பல்குரல் புள்ளின் ஒலி The sound of birds with diverse voices 84

அழகிய தேரில் வந்த இந்த அரசன் பொறையன் போரிடுவதற்காகப் பூழிநாட்டில் தங்கியிருந்தான். 
  • அப்போது போர்முரசு இடி போல் முழங்கிற்று. 
  • போர்யானை மழை பொழிவது போல் ஒலித்தது. 
  • பொறைய! 
  • எமன் போல் மக்களைக் கொல்பவனே! 
  • நீ அழித்த கோட்டைகள் எண்ணற்றவை என்பதை உன் பகைவர் அறிவர். 
  • இருந்தாலும் உன் ஆற்றலை எண்ணாமல் உன்னைத் தாக்குகின்றனர்.  
  • அப்போது மூங்கில் முளை யானையின் காலில் மிதித்துத் துவட்டப்படுவது போல் அழிகின்றனர். 
  • பகை-வீரர்களும் பகைவர் யானைகளும் உன் படையின் வேலால் தாக்கப்பட்டு சாய்ந்து கிடக்கின்றன. 
  • மதிலைக் காக்கும் காஞ்சிப் போரில் உன் பகைவர் இப்படிக் கிடப்பதைக் காண்பது ஒருவகை இன்பந்தான். 
  • மழை பொழிந்து நின்ற நேரத்தில் பறவைகளின் ஒலி கேட்பது போன்ற இன்பம். 

0

Poraiyan, the king who arrived in a magnificent chariot, was stationed in the Puzhi land, ready for battle. 
  • Suddenly, the war drum thundered like a storm cloud, and the war elephants trumpeted with a sound like pouring rain. 
  • O Poraiyan! 
  • You, who slay foes like the God of Death
  • —your enemies are well aware of the countless fortresses you have demolished; yet, disregarding your might, they dare to attack you. 
  • In doing so, they are crushed and destroyed, much like tender bamboo shoots trampled under the feet of an elephant. 
  • Enemy warriors and their elephants lie fallen, struck down by the spears of your army. 
  • Witnessing your foes lying thus—amidst the battle to defend the ramparts—brings a unique pleasure; it is akin to the delight of hearing the songs of birds after the rain has ceased.

0

ஒன்பதாம் பத்து பாட்டு - 84

எடுத்(து)ஏ(று) ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்(பு)உறு முரசம் கண்அதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதல்அணந்(து) எழுதரும் தொழில்நவில் யானைப்
பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்     5
பூழியர் கோவே பொலம்தேர்ப் பொறைய
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப
கொடிநுடங்(கு) ஆர்எயில் எண்ணுவரம்(பு) அறியா
பல்மா பரந்தபுலம் ஒன்(று)என்(று) எண்ணாது
வலியை ஆதல்நற்(கு) அறிந்தனர் ஆயினும்    10
வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கால்முளை மூங்கில் கவர்கிளை போல
உய்தல்யா வதுநின் உடற்றி யோரே
வணங்கல் அறியார் உடன்(று)எழுந்(து) உரைஇப்
போர்ப்(பு)உறு தண்ணுமை ஆர்ப்(பு)எழுந்து நுவல     15
நோய்த்தொழில் மலைந்த வேல்ஈண்(டு) அழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ(டு)
உரும்எறி வரையின் களிறு நிலம் சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
குவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே     20
காலை மாரி பெய்துதொழில் ஆற்றி
விண்டு முன்னிய புயல்நெடும் காலைக்
கல்சேர்பு மாமழை தலைஇப்
பல்குரல் புள்ளின் ஒலிஎழுந் தாங்கே. (84)

  • பெயர்: தொழில்நவில்யானை
  • துறை: வாகை
  • வண்ணம்: ஒழுகுவண்ணம்
  • தூக்கு: செந்தூக்கு

பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - ஒன்பதாம் பத்து - இளஞ்சேரல் இரும்பொறையை, பெருங்குன்றூர்கிழார் பாடிய பத்துப் பாட்டு. 


No comments:

Post a Comment