- ‘நன்மரம்’ என்பது கோட்டைக் கதவுக்குத் தாழ்ப்பாளாகப் போடப்படிக்கும் பெரிய குறுக்குமரம். இந்தச் சேரன் இப்படிப்பட்ட மரங்களைத் தகர்த்துப் பல கோட்டைகளைக் கைப்பற்றினான். மற்றும் இவன்மீது பகைமை கொண்டிருந்த சென்னியர் (சோழர்) பலரை வென்றான். இவன் ஏந்திய வேல் வெண்முத்துகளைத் திறையாக இவனுக்குத் தரும். இவன் தன் முன்னோரைப் போலப் புகழ் பெற்று விளங்கினான்.
- இவன் தலைநகரம் நறவு. இங்குப் பல நீரூற்றுச் சுனைகள். சுனைகளில் பெண்-தேவதைகள் (நீரர-மகளிர்). இவற்றுடன் இருக்கும் மலையடுக்கங்கள். இந்த நறவு நகரில் இவன் இருக்கிறான். அரசர்கள் இவனைப் பணிகின்றனர். இவன் அறம் செய்கிறான். போர்மறம் புரிகிறான். நாக்குத் தவறாதவன். கவலை இல்லா நெஞ்சம் கொண்டவன்.
- கபிலன் இவன் பாட்டன் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிப் பல ஊர்களைப் பரிசாகப் பெற்றான். அந்த ஊர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலவாக இவன் புகழ் பெருக வேண்டும்.
0
- ‘Nanmaram’ refers to the massive crossbeam used as a bolt for a fortress gate; this Cheran king shattered such beams to capture numerous strongholds. He also vanquished many among the Chenniyar (Cholas) who harbored enmity toward him. The spear he wielded compelled the offering of white pearls as tribute. Like his ancestors, he reigned with great renown.
- His capital is Naravu, a place abounding in springs inhabited by water-nymphs and surrounded by mountain ranges. He resides in this city of Naravu; kings bow before him. He upholds righteousness and wages war with valor; he is a man of unwavering truth and possesses a heart free from care.
- Kapilar sang of his grandfather, Selvak Kadungo Vazhiyathan, and received many villages as a reward; may this ruler's fame grow to surpass even the number of those villages.
0
ஒன்பதாம் பத்து பாட்டு - 85 இதன் முந்தைய பதிவு
நல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேல் முத்தைத் தம்மென
முன்திணை முதல்வர் போல நின்று 5
தீம்சுனை நிலைஇய திருமா மருங்கின்
கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச்
சூடா நறவின் நாள்மகிழ் இருக்கை
அர(சு)அவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் 10
உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்
நனவில் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே. (85)
- பெயர்: நாடுகாண் நெடுவரை
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - ஒன்பதாம் பத்து - இளஞ்சேரல் இரும்பொறையை, பெருங்குன்றூர்கிழார் பாடிய பத்துப் பாட்டு.
No comments:
Post a Comment