Pages

▼

Saturday, 10 October 2026

வானி நீரினும் தீந்தண் சாயலன் He possesses a nature even more sweetly cool and gentle than the waters of the *Vaani* River.86

  • குருதி நாற்றம் அடிக்கும் போர்க்களத்தில் பகைவர்களைக் கொல்லும் வேல் ஏந்தியவன் எம் பொறையன்  என்று சொல்லும்போது நான் செத்துக்கொண்டிருக்கிறேன். 
  • எம் அரசன் பாடி வரும் இல்லாதவர்களின் துன்பம் போக்கும் புரவலன் எனக் கேட்கும்போது மகிழ்கிறேன். 
  • மகளிர் பாய்ந்து விளையாடும் சிறுவானி ஆற்று நீரின் குளுமையைக் காட்டிலும் இவன் குளுமையாகத் தோன்றுபவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். 

0

  • I am overcome with emotion when it is said that our Poraiyan is the wielder of the spear that slays foes on the blood-reeking battlefield.
  • I rejoice to hear him hailed as the patron who dispels the misery of the destitute.
  • I take pride in declaring that his presence is more soothing than the cool waters of the Siruvani River, where women frolic and play.

0

ஒன்பதாம் பத்து பாட்டு - 86    இதன் முந்தைய பதிவு

உறல்உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்(று)அமர்க் கடந்த வெம்திறல் தடக்கை
வென்வேல் பொறையன் என்றலின் வெருவர
வெப்(பு)உடை ஆடூஉச் செத்தனென் மன்யான்
நல்இசை நிலைஇய நனம்தலை உலகத்(து)           5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடுநடை அண்ணல்
கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த     10
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே. (86)

  • பெயர்: வெம்திறல் தடக்கை
  • துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
  • வண்ணம்: ஒழுகுவண்ணம்
  • தூக்கு: செந்தூக்கு

பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - ஒன்பதாம் பத்து - இளஞ்சேரல் இரும்பொறையை, பெருங்குன்றூர்கிழார் பாடிய பத்துப் பாட்டு. 


No comments:

Post a Comment