Pages

Tuesday, 25 August 2026

உடலால் - - - 173

  • வந்தவர் பிரிவர். 
  • பிணி வரும்; போகும். 
  • உடம்பு முடங்கும். 
  • ஆகவே, என் நெஞ்சே!  *பிறப்பு துன்பம் தரும்* என்று உணரும் பேரறிவாளனை இறுக்கமாப் பற்றிக்கொள்.

  • Those who have come will depart.
  • Ailments will come and go.
  • The body will grow frail.
  • Therefore, O my heart! Cling firmly to the truly wise one who realizes that birth brings suffering.

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.    173 

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 


No comments:

Post a Comment