Pages

Tuesday, 25 August 2026

என்ன செய்ய வேண்டும் 172

  • அறநெறி இன்னது எனத் தெரிந்துகொள்ள வேண்டும். 
  • சாவுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். 
  • மற்றவர்கள் கடுமையாகப் பேசினால் பொறுத்துக்கொள்ள வேண்டும். 
  • பிறர் ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். 
  • தீயவர் நட்பை வெறுத்து ஒதுக்க வேண்டும். 
  • பெருந்தன்மை உள்ளவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • One must understand the nature of righteous conduct.
  • One should fear only death.
  • One must show forbearance when others speak harshly.
  • One must guard against the deceptions of others.
  • One must shun the company of the wicked.
  • One must accept the counsel of the magnanimous.

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.   172

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 

 

No comments:

Post a Comment