- சொல்லப்போனால், படிக்காமல் வீணாகக் கழித்த நாள், பெரியவர்களுடன் சேர்ந்து பழகாத நாள், தன்னால் முடிவதைப் பிறருக்குக் கொடுக்காத பகல் ஒன்றுகூடப் பண்புடையவனிடம் இல்லை.
- In fact, a person of character does not let a single day pass without studying, without associating with elders, or without giving whatever they can to others.
கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண் 169
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
No comments:
Post a Comment