Pages

Tuesday, 25 August 2026

காலையில் தோன்றும் நிழல் 166

கடல் சார் சேர்ப்பு நிலத் தலைவனே! கேள். 
  • காலையில் தோன்றும் நிழல் மதியம் வரையில் குறைந்துகொண்டே செல்வது போல பண்பில் சிறியவன் ஒருவன் கொள்ளும் நட்பு தேய்ந்துகொண்டே இருக்கும். பழம்புகழ் பெற்ற நல்லான் ஒருவனின் நட்பு மதியத்திலிருந்து மாலை வரையில் நிழல் நீண்டுகொண்டே செல்வது போல வளர்ந்துகொண்டே இருக்கும். 

  • Just as a morning shadow steadily shrinks until noon, the friendship formed by a person of inferior character gradually wanes. Conversely, the friendship of a virtuous person of established repute grows steadily, much like a shadow lengthening from noon until evening.

நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை: - விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.   166

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 

காலை நிழல்


No comments:

Post a Comment