Pages

Monday, 24 August 2026

அரசன் ஆருக்கு நடுங்குவான் 164

  • படமெடுக்கும் நாகம் பாறைப் பிளவுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும் இடி முழக்கம் கேட்டால் நடுங்கும். அதுபோல அரசன் ஒருவன் பாதுகாப்பான கோட்டைக்குள் இருந்தாலும், பெருந்தகையாளன் சினம் கொண்டால் நடுங்கத்தான் செய்வான். 

  • Even a hooded cobra, safely ensconced within a rocky crevice, trembles at the sound of thunder; likewise, a king—even while secure inside his fortress—will surely tremble if a truly noble person becomes enraged.

விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.   164

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 


No comments:

Post a Comment