Pages

Monday, 24 August 2026

பொறுமையின் எல்லை மீறினால் 161

அருவி ஒலிக்கும் அழகிய மலைநாட்டு வேந்தனே! கேள். 
  • இவர் பிறருக்குத் தீங்கு செய்யாதவர்; எதையும் பொறுத்துக்கொள்வார் - என்று நினைத்து அவர் வெறுக்கும்படியான செயல்களை யாரும் செய்யாமல் இருக்க வேண்டும். அவர் வெறுத்தால் அதனால் வரும் துன்பத்தினை யாராலும் போக்க முடியாது. 

  • One should refrain from doing anything that would displease him, bearing in mind that he is a person who harms no one and is highly forbearing; for if he were to become resentful, no one could avert the resulting suffering.

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.   161

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 


No comments:

Post a Comment