பக்கம் 31
புலந்திரன் அத்திபுரம் காண்கிறது
அத்திபுரம் = அஸ்தினாபுரம்
ஆகாய மார்க்கத்தில் அப் புரவி தான் பறக்க
அத்திபுரம் கண்டாரே ஐயர் திமுமகனார்
அந்த வளநாட்டை அடுத்தது அப்புரவி
அம்பலமோ என்றலே ஐந்நூறு காத வழி
இடம்பெரிய வாசலது எழுநூறு காதவழி
தூணுக்குத் தூணும் அங்கே தொண்ணூறு காதவழி
ஆயிரம் காதவழி அகலமுள்ள அம்பலத்தில்
நானூறு காதமது நலம் பெரிய அம்பலத்தில்
முந்நூறு காதமது முத்தணிந்த அம்பலத்தில்
பொன் தூணும் நால் தூணும் பேரிகை உத்தரமும்
குளிர்ந்த சந்தனத் தூணும் குங்கும நற்றூணும்
தூணுக்குத் தூணு துணைமலையாய்ச் சேர்ந்தது
மெத்தை அலங்கரித்து மேற்கட்டு தான் கட்டி
சுத்தி அலங்கரித்து தோரணங்கள் தான் கட்டி
கண்ணாடி சல்லி கட்டி காவலன் தன் அம்பலத்தில்
சங்கிழைத்த மண்டபமும் தங்க முத்து மாலைகளும்
எங்கெங்கும் சோதியிட எழில் முத்து மாலைகளும்
வந்து நிழல் காட்டும் மாணிக்க மாலைகளும்
வாடாத தாமரையும் வந்து நிழல் காட்ட
முத்து மரகதமும் முழுப் பன்னீர்ச் சீலைகளும்
தங்கத்தால் பொம்மைகளும் செங்கழுநீர் மாலைகளும்
செம்பொன்னால் சீலைகளும் செம்பவளத் தூணுகளும்
எங்கெங்கும் சோதி விட இராசாவின் அம்பலத்தில்
சித்திரம் சேர் மண்டபத்தில் செம்பவள மாலைகளும்
வந்து பரிமளங்கள் வாசனைகள் தான் வீச
வாழை கமுகுகளும் வர்ன பலாச் சோலைகளும்
சேரவே நாட்டிய திகழ் பெரிய அம்பலத்தில்
நின்ற இடந்தோறும் நிலைதோறும் சப்பர மஞ்சம்
பார்த்த இடந்தோறும் பந்தங்கள் தேர் விளங்கும்
காடை விளக்குகளும் கை விளக்கும் தேர் விளக்கும்
ஏணி விளக்குகளும் எண்ணாத தேர் விளக்கும்
தரும முடியார்க்குச் சப்பிர நல் விளக்கும்
பந்தங்கள் சேர்வையும் பகல் வத்தி இடி பாணம்
பூ வர்ண மத்தாப்பும் பொறி பாணம் தான் முழங்க
எத்திசையும் தான் முழங்க இட்டிருக்கும் அம்பலத்தில்
ஏறியிருக்கும் அந்த ஏழு மணி சிங்காதனமும்
வந்திருக்கும் மன்னர் மகாசேனை தன்னுடனே
முந்நூறு கோடி முடிமன்னர் அங்கிருக்க
ஈட்டி பிடி மன்னர்கள் இளவரை அரங்கு இருக்க
பாங்கு பிடிக்கிறதோர் படைமன்னர் அங்கிருக்க
கத்தி பிடிக்கும் மன்னர் காவலர்கள் அங்கிருக்க
கோடி லட்சம் கோடி கொற்றவர்கள் அங்கிருக்க
சட்டை கழட்டாத சாமந்தர் அங்கிருக்க
வேத பிராமணரும் வேதியரும் அங்கிருக்க
பாஞ்சால மகாராசன் படைகளும் அங்கிருக்க
காசி வளநாடு ஆண்டார் கர்னனது சேனைகளும்
துரும்பரையத் தேன் சொரியும் சோழன் பரிகலமும்
ஏடல்லோதரனவன் இடும்பன் பரிகலமும்
ஆகமங்கள் வேதம் ஓதும் அகஸ்தியனார் தந்தருளும்
மதுரை பரிகலமும் வளநாடு சேனைகளும்
ஏழுலக ராஜாக்கள் எங்கும் நிறைந்திருப்பார்
தங்கை மணவாளன் தறுதலையன் அங்கிருந்தான்
தரும முடியழகன் சகலரும் அங்கிருந்தார்
முந்நூறு தாதியர்கள் முத்தின் கவரி இட
எழுநூறு தாதியர்கள் இணைகவரி தான் வீச
பச்சோலைப் பெண்கள் பரிந்து கவி பாட
மேள வகைகளும் விருது பல முழங்க
கவியோர் கவி பாட கட்டியங்கள் ஆர்ப்பரிக்க
புலவர் இருபுறமும் பூ வர்ஷமாய்ச் செரிய
கீதம் ஏத்தும் ரம்பை கின்னரிகள் வாசிக்க
கர்னன் திருமருங்கில் கட்டிய பூச்சரங்கள்
திரியோதனன் மருங்கில் சென்று நிழலாட
திரியோதிரன் பந்தலில் சிறப்பா பூச்சரங்கள்
கர்னன் திரு மருங்கில் கண்டு சுழலமிட
அவர் குழலில் மாலை இவர் குழலில் தானாட
இவர் குழலில் மாலை அவர் குழலில் தானாட
ஏறி இருந்தார்கள் இருவரும் சிங்காதனத்தில்
கண்டான் புலந்திரனும் கண்கள் ரெண்டும் கொள்ளாமல்
பாண்டவர்கள் தன்னுடனே பகிந்து அரசாளாமல்
பாதி அரசு அவர் பங்கிட்டு ஆளாமல்
எதினாலே காடுறைந்தார் என்னுடைய ஐயன்மார்
இக் கோடி ராஜமன்னர் இருக்க இடமிருக்க
ஐவர் அந்த பாண்டவர்கள் அவர்க்கு இடம் இல்லை என்று
அந்நேரம் காட்ட அடித்து ஓட்டிவிட்டானே
நிற்குமோ இவ்வாழ்வு நிலைக்குமோ இவ்வரசு
இப் பெரிய அம்பலத்தில் இந்த ராஜர் தங்கள் முன்னே
கட்டழகு என் தாயார் கால்நடையாய் வந்தாளோ
பார்த்தும் இருந்தாரோ பாண்டவர்கள் ஐவருந்தான்
கண்டும் இருந்தாரோ காளையர்கள் ஐவருந்தான்
தக்க துகழுடைய தர்மரது ஆயுதமும்
ஏழானை பலம் உடைய இயல் வீமர் ஆயுதமும்
ஆனால் அழகுமன்னன் அருச்சுனன் கை அம்பு வில்லும்
நாமக் கொடியுடைய நகுலரது ஆயுதமும்
சாஸ்திரக் கொடியுடைய சகாதேவர் கைவாளும்
ஏதுக்கு என்று இருந்தது எங்கள் ஐயர் ஆயுதமும்
தன் தேவிக்கு இல்லாத தையிரியங்கள் ஏதுக்கு
வெற்றி மதயானை வீமர் பொறுக்காரே
அருச்சுன ராஜதுரை ஆர் சொல்லும் கேளாரே
ஆர் சொல்லும் கேளாரே ஐயமார் நால்வருந்தாம்
தக்க புகழுடைய தருமர் சொல் கேளானே
நூலார் கடுந்திரளார் தூற்றொருவர் பூ முடியை
வெட்டிப் பலியிடுவேன் வீரமா காளிக்கு
பட்டம் தரித்து பாருலகை ஆளவைப்பேன்
காவலர்ள் ஐவருடன் கை கட்டிச் சேவிப்பேன்
இது பத்தினியாள் நின்று பரதவிக்கும் மண்டபமோ
உத்தமியாள் நின்று உலகில் உரி கொடுத்த அம்பலமோ
பாவை மனம் உருகப் பந்தாட்டம் ஆட்டி வைத்தான்
அம்பலத்தைப் பார்த்து ஆணழகன் வயிறு எரிந்து
கட்டழகன் கோமானும் கண் நிறைய முத்து உதிர்த்தான்
இந்திரனும் அங்கே ஏங்கி அழும்போது
(புலந்திரன் கலந்தாரி கோட்டையைக் காண்கிறது)
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
No comments:
Post a Comment