Pages

Saturday, 18 April 2026

பூசை ஆசைக்காகவே - The worship is solely for the sake of desire.

நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
 
71
மந்திரம் இல்லையடி – அகப்பேய் – வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி – அகப்பேய் – சமயம் அழிந்ததடி
  • மந்திரம், தந்திரம் - இல்லாவிட்டால் வாதனை (துன்பம்) இல்லை. நினைவைத் துன்புறுத்தும் சமயங்களும் இல்லை.   
72
பூசை பாசமடி – அகப்பேய் – போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி – அகப்பேய் – எல்லாமும் இப்படியே
  • பூசை ஆசையை நிறைவேற்றச் செய்யப்படுகிறது. 
  • அங்கே சமய அறிவு கொட்டம் அடிக்கிறது. 
  • ஈசன் என்பதே ஒரு மாயை. 
  • எல்லாமும் இப்படித்தான்.
  • Worship is performed to fulfill desires.
  • Therein, religious dogma runs rampant.
  • The very concept of the Lord is an illusion.
  • Everything is just like this.
73
சொல்ல லாகாதே – அகப்பேய் – சொன்னாலுந் தோடமடி
இல்லை இல்லையடி – அகப்பேய் – ஏகாந்தங் கண்டாய்
  • எதையும் சொல்லக்கூடாது
  • சொன்னால் சோஷம் வரும்
  • நினைப்பே! உன்னிடம் அது இருப்பதில்லை
  • எல்லாம் ஏகாந்தம். (ஒன்றுமில்லா முடிவு).
  • Don't say anything
  • If you say it, you will get hurt
  • O mind! You don't have it
  • Everything is loneliness. (The end of nothing).
74
தத்துவத் தெய்வமடி – அகப்பேய் – சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம் – அகப்பேய் – மாயை வடிவாமே
  • சதாசிவம் ஒன்றே தத்துவத் தெய்வம்
  • மற்றவை மாயை 
75
வார்த்தை அல்லவடி – அகப்பேய் – வாச மகோசரத்தை
ஏற்ற தல்லவடி – அகப்பேய் – என்னுடன் வந்ததல்ல
  • நான் சொல்பவை வெறும் வாய்ச்சொல் அன்று 
  • மணக்கும் திருவாக்கு
  • இவை என்னிடம் இருப்பவை அல்ல. 
  • இறைவனிடம் உள்ளவை
  • What I speak are not mere words;
  • They are fragrant, divine utterances.
  • These do not originate from me;
  • They reside with God.
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 75 / 90

No comments:

Post a Comment