நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
66
இந்திர சாலமடி – அகப்பேய் – எண்பத் தொருபதமும்
மந்திரம் இப்படியே – அகப்பேய் – வாயைத் திறவாதே
- இறைவனின் 81 (9 பெருக்கல் 9) பதங்கள்
- இது இந்திரசாலம்
- மாயாசால வித்தை
- மந்திமும் இப்படித்தான்
- இது வாய் திறக்காமல் முணுமுணுத்தல்
67
பாழக வேணுமென்றால் – அகப்பேய் – பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே – அகப்பேய் – கேள்வியும் இல்லையடி
- நினைப்பு ஒரு பாழ்
- பார்த்ததை நம்பாதே
- யாரும் கேட்காமல் இதனைச் சொல்கிறேன்
- இது பற்றிய வினாக்களும் இல்லை
68
சாதி பேதமில்லை – அகப்பேய் – தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் – அகப்பேய் – ஒன்றுந்தான் இல்லையடி
- சாதிபேதம் இல்லை
- எல்லாரும் ஒன்றுதான்
69
சூழ வானமடி – அகப்பேய் – சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி – அகப்பேய் – மெய்யது கண்டாயே
- யானை உண்ட விளாம்பழம் அதன் சாணியில் அப்படியே இருக்கும். அது வெறும் ஓடு. உள்ளே இருப்பது செரிமானம் ஆகியிருக்கும். நினைப்பும் இப்படித்தான்.
70
நானும் இல்லையடி – அகப்பேய் – நாதனும் இல்லையடி
தானும் இல்லையடி – அகப்பேய் – சற்குரு இல்லையடி
- நான் இல்லை
- நாதன் இல்லை
- தான் இல்லை
- சற்குரு இல்லை
- எல்லாம் நினைப்பு
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 70 / 90
No comments:
Post a Comment