Pages

Saturday, 18 April 2026

கண்டுகொள்ளாமல் இறைவனைப் பார் - Disregard everything else and look at God.

நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
 
61
வாசியி லேறியபடி – அகப்பேய் – வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் – அகப்பேய் – வாராது சொன்னேனே
  • வாசியில் ஏறும்படிப் படி. / நினைவில் தங்குமாறு படி
  • அதில் உயர்ந்த பொருளைத் தேடு
  • அது நினைவுக்கு எட்டாது.
62
தூராதி தூரமடி – அகப்பேய் – தூரமும் இல்லையடிப்
பாராமற் பாரடியோ – அகப்பேய் – பாழ்வினைத் தீரவென்றால்
  • இறை இருக்குமிடம் தூராதி தூரம்
  • நீ நினைத்தால் அது தூரம் இல்லை
  • கண்டுகொள்ளாமல் இறைவனைப் பார் / Disregard everything else and look at God.
  • அதனால், உன்னைப் பாழாக்கும் வினை தீரும்.
63
உண்டாக்கிக் கொண்டதல்ல – அகப்பேய் – உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ – அகப்பேய் – கற்பனை அற்றதடி
  • நினைவு இறைவனை உண்டாக்கிக் கொள்ளவில்லை
  • இறைவன் நினைவாக இருக்கிறான்.
  • கற்பனை அன்று. 
  • கண்டவர்களால் சொல்ல முடியவில்லை
    • Consciousness did not create God;
    • Rather, God *is* Consciousness.
    • It is not a mere figment of imagination.
    • Those who have realized Him are unable to articulate it.
64
நாலு மறை காணா – அகப்பேய் – நாதனை யார் காண்பார்
நாலு மறை முடிவில் – அகப்பேய் – நற்குரு பாதமடி
  • நான்கு வேதங்களாலும் பார்க்க முடியாத இறைவனை யாரால் பார்க்கமுடியும்? மறைந்திருக்கும் அது நற்குருவின்  பாதம். 
65
மூலம் இல்லையடி – அகப்பேய் – முப்பொருள் இல்லையடி
மூலம் உண்டானால் – அகப்பேய் – முத்தியும் உண்டாமே
  • அது மூலமோ, முப்பொருளோ இல்லை. மூலம் இருந்தால் அதற்கு முத்தி (முடிவு) இருக்குமல்லவா?
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 65 / 90

No comments:

Post a Comment