நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
56
பிறவி தீரவென்றால் – அகப்பேய் – பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள் – அகப்பேய் – சும்மா இருப்பார்கள்
- பிறவி தீரவேண்டும் என்றால் இறைவனையும் உன்னையும் பிரித்துப் பார்க்காதே. சும்மா இருப்பவர்தான் துறவி.
57
ஆரலைந்தா லும் – அகப்பேய் – நீயலையா தேயடி
ஊரலைந்தா லும் – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே
- ஐந்து புலன்களும் ஐந்து மீன்கள்.
- புலன்களை மீன்கள் போல் அலைய விடாதே
- ஐம்புலன்கள் அலைந்தாலும் அது விரும்பியதை அடைய நீ நினைக்காதே \ Even if the five senses wander, do not seek to attain what they desire.
58
தேனாறு பாயுமடி – அகப்பேய் – திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே
- அவன் திருவடி கண்டவர் நினைவில் தேனாறு பாயும். ஊன நினைவோட்டம் இருக்காது. எதையும் பெறவேண்டும் என்று நினைக்காதே.
59
வெள்ளை கறுப்பாமோ – அகப்பேய் – வெள்ளியுஞ் செம்பாமோ
உள்ளது உண்டோடி – அகப்பேய் – உன் ஆணை கண்டாயே
- வெள்ளை கறுப்பு ஆகாது. வெள்ளி செம்பு ஆகாது. உள்ளது உள்ளபடி இருக்கும். இது உனக்கும் தெரியுமல்லவா
60
அறிவுள் மன்னுமடி – அகப்பேய் – ஆதாரம் இல்லையடி
அறிவு பாசமடி – அகப்பேய் – அருளது கண்டாயே
- அறிவு உனக்குள் இருக்கும்
- இதற்கு எந்தப் பிடிப்பும் இல்லை \ The intellect lacks a firm grasp.
- பாசந்தான் அறிவு
- இறைவன் பாசந்தான் அருள்
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 60 / 90
No comments:
Post a Comment