Pages

Sunday, 19 April 2026

இறைவன் நினைவலைகளுக்கு அப்பாற்பட்டவன் - The Divine transcends the waves of thought.

நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
 
76
சாத்திரம் இல்லையடி – அகப்பேய் – சலனங் கடந்ததடி
பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் – பாவனைக் கெட்டாதே
  • இறைவனுக்குச் சாத்திரம் இல்லலை
  • இறைவன் நினைவலைகளுக்கு அப்பாற்பட்டவன்
  • அவனைப் பார்க்க முடியாது
  • பாவனை செய்யவும் முடியாது
  • The Divine is beyond the scope of scriptures.
  • The Divine transcends the waves of thought.
  • It cannot be seen;
  • Nor can it be conceived.
77
என்ன புடித்தால் என் – அகப்பேய் – ஏது தான் செய்தால் என்
சொன்ன விதங்களெலாம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே
  • என்ன படித்தாலும்
  • எது செய்தாலும்
  • அவை நினைவைச் சுடுகின்றன
78
தன்னை அறியவேணும் – அகப்பேய் – சாராமற் சாரவேணும்
பின்னை அறிவதெலாம் – அகப்பேய் – பேயறி வாகுமடி
  • உன்னையும் இறைவனையும் அறிந்துகொள்ள வேண்டும். 
  • நீயும் இறைவனும் ஒன்றாகச் சாராமல் சார்ந்திருக்க வேண்டும்
  • மற்றவை பேயறிவு
79
பிச்சை எடுத்தாலும் – அகப்பேய் – பிறவி தொலையாதே
இச்சை அற்றவிடம் – அகப்பேய் – எம்இறை கண்டாயே
  • இறைவனிடம் பிச்சை கேட்டாலும் பிறவி தொலையாது
  • ஆசை இல்லாத இடத்தில் இறைவன் இருப்பான் 
80
கோலம் ஆகாதே – அகப்பேய் – குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே – அகப்பேய் – சஞ்சலம் ஆகாதே
  • வேடம் போட்டுக்கொள்ளாதே
  • குதர்க்கம் (ஏட்டிக்குப் போட்டியாக எதையும்) பேசாதே
  • மாயாசாலம் செய்யாதே 
  • இவற்றால் சஞ்சலம் உண்டாகும்
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 80 / 90

No comments:

Post a Comment