Pages

Sunday, 19 April 2026

இறைவன் எந்தச் செயலும் செய்வதில்லை - God performs no action.

நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
 
81
ஒப்பனை அல்லவடி – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே
அப்புடன் உப்பெனவே – அகப்பேய் – ஆராய்ந்து இருப்பாயே
  • உன் நினைவுகளை அழகுபடுத்தாதே --- Do not embellish your memories.
  • நீரில் உப்பு கலந்திருப்பது போல நினைவுகளை இறைவனோடு கலந்திருக்கச் செய்.
82
மோட்சம் வேண்டார்கள் – அகப்பேய் – முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் – அகப்பேய் – சின்மய மானவர்கள்
  • சின்மயம் -- இதில் *சின்* என்பது சித்து / சித்தம் / அறிவு. -- *மயம்* என்பது நிறைவு. -- சின்மயம் என்பது அறிவுநிறை  
  • அறிவு நிறைந்தவர் = சின்மயமானவர் 
  • அறிவு நிறைந்தவர் மோட்சம், முத்தி, தீட்சை (அருள்) - எதையும் விரும்ப மாட்டார்கள்.
83
பாலன் பிசாசமடி – அகப்பேய் – பார்த்தக்கால் பித்தனடி
கால மூன்றுமல்ல – அகப்பேய் – காரியம் அல்லவடி
  • இறைவன் குழந்தை உள்ளம் படைத்தவன்
  • பிசாசு
  • பித்தன்
  • காலம் மூன்றும் இல்லாதவன்
  • இறைவன் எந்தச் செயலும் செய்வதில்லை
84
கண்டதும் இல்லையடி – அகப்பேய் – கண்டவர் உண்டானால்
உண்டது வேண்டடியோ – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே
  • இறைவனைக் கண்டவர் இல்லை
  • இருப்பாரேயானால், அவர் இறைவனிடம் வாங்கி உண்டதை நீ கேட்டுப் பெற்றுக்கொள்.
85
அஞ்சையும் உண்ணாதே – அகப்பேய் – ஆசையுடன் வேண்டாதே
நெஞ்சையும் விட்டு விடு – அகப்பேய் – நிட்டையில் சாராதே
  • ஐந்து புலன்களால் அவனை தின்னாதே
  • அதற்கு ஆசைப்படவும் செய்யயாதே
  • நினைப்பதை விட்டுவிட்டு நிட்டையில் அமைதியாய் இரு.
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 85 / 90

No comments:

Post a Comment