நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
86
நாதாந்த உண்மையிலே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் – அகப்பேய் – மெய்யென்று நம்பாதே
- நாதாந்தம் உண்மை
- என்றாலும் அதனைத் தேடிக்கொண்டிருக்காதே
- அது மேலே இருக்கும் சூது
- உண்மை என்று நம்பி நாதாந்த விளையாடு விளையாடாதே
87
ஒன்றோடு ஒன்று கூடில் – அகப்பேய் – ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும் – அகப்பேய் – நில்லாது கண்டாயே
- ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் தனித்தன்மை கெட்டுப்போகும்.
- நினைவில் பரமசிவம் நிற்காது
88
தோன்றும் வினைகளெலாம் – அகப்பேய் – சூனியங் கண்டாயே
தோன்றாமல் தோன்றிவிடும் – அகப்பேய் – சுத்த வெளிதனிலே
- சுத்த வெளியில் செய்யும் செயல் சூனியமாய் மறையும்
89
பொய்யென்று சொல்லாதே – அகப்பேய் – போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னக்கால் – அகப்பேய் – வீடு பெறலாமே
- இறை உடலுயிரில் வந்து போகிறது
- இதை மெய் என்று நம்பினால் அது வீடுபேறு
- The Divine comes and goes within the body and soul;
- If one believes this to be the Truth, that is Liberation.
90
வேதம் ஓதாதே – அகப்பேய் – மெய் கண்டோம் என்னாதே
பாதம் நம்பாதே – அகப்பேய் – பாவித்துப் பாராதே
- வேதம் ஓதாதே
- மெய்யறிவு பெற்றோம் என்று நினைக்காதே
- இறைவனடிகளை நம்பாதே
- இறைவனைப் பாவிக்காதே
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 90 / 90
முற்றும்
No comments:
Post a Comment