Pages

Sunday, 19 April 2026

சொல் - மொழி Word – Sentence

இலக்கண  நூல்களையும், வழக்குகளையும் பார்க்கும்போது, [சொல்], [மொழி] ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையே நுட்பமான வேறுபாடு இருப்பதைக் காணமுடிகிறது. 

சொல் - என்பது பொருளுணர்த்தும் தனிச்சொல்
மொழி என்பது பொருளுணர்த்தும் பலசொல்
மொழியை இக்காலத்தில் வாக்கியம் என்கிறோம்.

0

வேற்றுமைத் தொடரில் வேற்றுமை உருபு இல்லாமலேயே, வேற்றுமைத்தொகையாக வந்து வேற்றுமைப் பொருளை உணர்த்துவதை அறிவோம். 

அறம் செய விரும்பு (அறத்தைச் செய்ய விரும்பு) 

அதுபோல மொழியில் ஒன்று அல்லது சில சொற்கள் தொக்கி நிற்க, ஒரு சொல் தனித்து நின்று மொழிநிலை பெறுதலும் உண்டு. 

இது என்ன
மரம்

[கபுதா] - இது எந்தப் பொருளையும் உணர்த்தவில்லை. எனவே இது சொல் அன்று. 

[முயல் கொம்பு]  - இப்படி ஒரு பொருள் இல்லை. இதனை *இல்பொருள்* எனக் குறிப்பிடுவர். 

*கிளி வந்தான்* - இவை பொருள் தராமையால் மொழி (மரபுத்தொடர்) அன்று. அஃறிணைப் பெயர் உயர்திணை வினைமுற்று பெற்றிருக்கும் வழுத்தொடர். 

0

தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - ஒன்பது இயல்களிலும் தனிச்சொல் மொழியில் எப்படி அமையும் என்பது பற்றியே சொல்லப்படுகிறது.
 
மொழிமரபு - இயலிலுள்ள செய்திகளைப் பாருங்கள். சொல் மொழியாகும்போது எத்தகைய மாறுதல்களைப் பெறும் என்னும் மரபு வழி  நெறிமுறைகள் இதில் சொல்லப்பட்டுள்ளன. 

0

இவற்றால் *சொல்* என்னும் சொல் குறிக்கும் பொருளுக்கும், *மொழி* என்னும் சொல் குறிக்கும் பொருளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. 

No comments:

Post a Comment