Pages

Saturday, 11 April 2026

உலகே மாயம் The World is an Illusion

  •  ஆணவம், கன்மம், மாயை 
  • (அகந்தை, வினைப்பயன், வாழ விரும்பும் பற்று)
  • ஆகிய மும்மலங்களும் மாயைத் தவிர வேறொன்றும் இல்லை. 
  • (மயக்கத்தைத் தவிர வேறொன்றும் இல்லை). 
  • உலகிலுள்ள உயிர்களுக்கு இந்த மாய சத்தி ஆசையையும் அறிவையும் வளர்க்கும்; விலக்கும். 
  • உலகமே இதற்குக் காரணம். -- 171
0
  • மாயை உயிரின் அறிவையும், உடலின் ஆற்றலையும் மறைக்கும்
  • மேகம் சூரியனை மறைப்பது போல் மறைக்கும். -- 172
0
  • இதனால் உருவம் பெற்றிருக்கும் உயிரின் ஆற்றல் 
  • சூரியன் மேகத்தால் மறைக்கப்படுவது போல் 
  • மறைக்கப்படும் -- 173
0
  • ஒளியும் இருளும் போல 
  • அறிவு குணமும் இயங்கும், -- 174
0
  • பார்வை இல்லாத குருடன் பிற புலன்களால் விளங்கிக்கொள்கிறான். 
  • இது அறிவாற்றல். -- 175
0
  • நெல்லில் முளை, அரிசி, தவிடு மூன்றும் இருப்பது போல் 
  • மும்மலம் ஒருவரிடம் இருக்கும். -- 176
0
  • மும்மல ஆற்றல்கள் இறையருளின் கூறு. -- 177
0
  • இறைவன் ஆணையால் உயிர் இயங்கும். -- 178
0
  • 84 ஆயிரம் யோனி பேதங்களில் ஒன்றுதான் மனிதப் பிறவி. -- 179
0
  • பரந்துபட்ட சமயங்களில் செல்லாமல் சிவ சமயத்தில் இருக்கும் பேற்றினை நான் பெற்றிருக்கிறேன். -- 180
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல்,  இரண்டாஞ் சூத்திரம் பாடல் 180 முடிய   

No comments:

Post a Comment