Pages

Saturday, 11 April 2026

புலனின்பம் எப்போதும் கிடைப்பதில்லை Sensual pleasure is not always attainable.

  • சிறப்புடன் வாழும் ஆசையை விட்டுவிட்டு
  • வறுமை என்னும் சிறுமையிலிருந்து தப்பி
  • தாழ்ந்த நிலையில்
  • சைவ சமயம் சார்ந்து 
  • வாழும் ஊழ் விதியைப் பெறுதல் என்பது  பெறற்கரும் பேறாகும்
  • பெரிதும் உயர்ந்த சிவஞானத்தால் 
  • இளமதி சூடிய சிவனருள் பெற்றவர்க்கே இப் பேறு கிட்டும். -- 181
0
  • மனம், வாக்கு, காயம், ஆன்(மா), இடம் ஆகிய ஐந்தினாலும் அரன்பணி செய்வதற்காக அன்றோ வானவர் மண்ணுலம் வந்தனர். 
  • உடம்பெடுத்த நமக்கு இது தெரியவில்லையே -- 182
0
  • கரு, பிறந்தகுழந்தை, பால பருவம், குமரப்பருவம், நரைத்த பருவம் என்று உடலில் அழிவு தோன்றுகிறது. 
  • எனவே உயிருள்ளபோதே சிவப்பேறு வேண்டும். -- 183
0
  • புலனின்பம் எப்போதும் கிடைப்பதில்லை. 
  • எப்போதாவது கிடைக்கிறது. 
  • அதனால் வாழ்க்கை என்பது துன்பம். 
  • வாழ்வு கனவு போன்ற மருள்.
  • அரனின்பம் நிலையானது. -- 184
0
  • இறை உணர்வு இல்லாதவர் பிணம் போன்றவர். -- 185
0
  • அரனை வணங்குவோம். -- 186
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல்,  இரண்டாஞ் சூத்திரம் பாடல் 186 முடிய   

No comments:

Post a Comment