நினைப்புப் பேயே
கேள்
31
அறிந்து நின்றாலும் – அகப்பேய் – அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் – அகப்பேய் – போகாதே உன்னை விட்டு
- எதை எப்படித் தெரிந்துகொண்டாலும் நீ செய்த வினை உன்னை விட்டுப் போகாது.
32
ஈசன் பாசமடி – அகப்பேய் – இவ்வண்ணங் கண்ட தெல்லாம்
பாசம் பயின்றதடி – அகப்பேய் – பரமது கண்டாயே
- எதுவாயினும் அது ஈசன் பாசம்
33
சாத்திர சூத்திரமும் – அகப்பேய் – சங்கற்பம் ஆனதெல்லாம்
பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் –பாழ் பலங்கண்டாயே
- சாத்திரம், சூத்திரம், சங்கற்பம் - எதுவாயினும் அது ஏதுமில்லாதது; பயனற்றது.
34
ஆறு கண்டாயோ – அகப்பேய் – அந்த வினை தீர
தேறித் தெளிவதற்கே – அகப்பேய் – தீர்த்தமும் ஆடாயே
- வினை தீர, சிந்தனை தெளிந்தோடும் ஆற்றில் நீராடு.
35
எத்தனை காலமுந்தான் – அகப்பேய் – யோகம் இருந்தாலென்
முத்தனு மாவாயோ – அகப்பேய் – மோட்சமும் உண்டாமோ
- எத்தனைக் காலம் யோகம் செய்தாலும் நீ முத்தன் ஆகப்போவதில்லை. நீ மோட்சத்தை அடையப்போவதும் இல்லை.
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 35 / 90
No comments:
Post a Comment