Pages

Friday, 17 April 2026

வானுலகம் தித்திக்கும் தேன் - The celestial realm is sweet honey.

நினைப்புப் பேயே
கேள்
 
36
நாச மாவதற்கே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் – அகப்பேய் – பசுக்களும் போகாவே
  • நாசமாகும் எதனையும் நாடாதே என்று சொன்னேனே - கேட்டாயா
  • உன் உயிர் போனாலும் உலகம் போகாது
37
நாணம் ஏதுக்கடி – அகப்பேய் – நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால் – அகப்பேய் – காணக் கிடையாதே
  • உன் நல்வினை தீர்ந்த பின்னர் இறைவனைக் காண விரும்பினால் காணமுடியாது
38
சும்மா இருந்து விடாய் – அகப்பேய் – சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே
  • சும்மா இரு என்று சூத்திரம் சொன்னேனே -கேட்டாயா
  • நீ துள்ளும்போது சும்மா இருந்த இடம் இப்போது உன்னைச் சுட்டுவிட்டதே
  • இப்போது என்ன செய்வாய்?
39
உன்றனைக் காணாதே – அகப்பேய் – ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே – அகப்பேய் – இடத்தில் வந்தாயே
  • உன்னைப் பற்றி நினைக்காமல் உடம்புக்குள் நுழைந்தாயே
  • என்னையும் உன்னால் காணமுடியவில்லையே
40
வானம் ஓடிவரில் – அகப்பேய் – வந்தும் பிறப்பாயே
தேனை உண்ணாமல்– அகப்பேய் – தெருவோடு அலைந்தாயே
  • வானுலகம் உன்னைத் தேடி வரும்போது நீ ஏதோ என்று விட்டுவிட்டாய்
  • வானுலகத் தேனை உண்ணாமல் தெருவில் வழிந்தோடும்படி விட்டுவிட்டாயே
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 40 / 90

No comments:

Post a Comment