நினைப்புப் பேயே
கேள்
41
சைவ மானதடி – அகப்பேய் – தானாய் நின்றதடி
சைவம் இல்லையாகில் – அகப்பேய் – சலம் வரும் கண்டாயே
- தானாய் வருவது சைவம்
- சைவம் இல்லையேல் சலம் (சலனம்)
42
ஆசை அற்றவிடம் – அகப்பேய் – ஆசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி – அகப்பேய் – எங்ஙனஞ் சென்றாலும்
- ஆசை இல்லாததுதான் ஆசாரம் --- Freedom from desire is true virtue.
- எங்குச் சென்றாலும் ஈசனின் பாசந்தான் தெரிகிறது.
43
ஆணவ மூலமடி – அகப்பேய் – அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி – அகப்பேய் – கூடப் பிறந்ததுவே
- ஆணவத்துக்கு அகரம் மூலம்
- கோணலான உகரம் அகரத்துடன் கூடப் பிறந்தது
44
ஒன்றும் இல்லையடி – அகப்பேய் – உள்ளபடி யாச்சே
நன்றிலை தீதிலையே – அகப்பேய் – நாணமும் இல்லையடி
- நீ நினைத்தது நடக்கவில்லை
- எதுவும் உள்ளபடி (நடக்கிறபடி) நடக்கிறது
- நடப்பது நன்றும் இல்லை; தீதும் இல்லை
- நினைப்புக்கு வெட்கம் என்பதே இல்லை
- எதையும் நினைக்கும் --- The mind can conceive of anything.
45
சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது சொன்னேனே
எம்மாயம் இதறியேன் – அகப்பேய் – என்னையும் காணேனே
- சும்மா இருந்தால் சுடும் என்று சொன்னேன்.
- இது என்ன மாயம்?
- எனக்கே தெரியவில்லை
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 45 / 90
No comments:
Post a Comment