Pages

Friday, 17 April 2026

நினைப்பு ஒரு அக்கினி - Thought is a fire.

நினைப்புப் பேயே
கேள்
 
46
கலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – கண்டார் நகையாரோ
நிலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – நீயார் சொல்வாயே
  • கலைகள் உனக்கு எதற்காக
  • (உனக்குச் சீலை எதற்காக)
  • (பேய் சீலை கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் கண்டவர்கள் சிரிக்க மாட்டார்களா
  • உனக்கென்று நிலைப்பாடு எதற்காக
  • உண்மையில்  நீ யார்?
47
இந்து அமிர்தமடி – அகப்பேய் – இரவி விடமோடி
இந்து வெள்ளையடி – அகப்பேய் – இரவி சிவப்பாமே
  • உனக்கு நிலா அமிழ்தம் என்றால், சூரியன் விடமோ
  • நிலா வெள்ளை என்றால், சூரியன் சிவப்போ
48
ஆணல பெண்ணலவே – அகப்பேய் – அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே – அகப்பேய் – சற்குரு கண்டாயே
  • நீ ஆணுமில்லை; பெண்ணுமில்லை; அக்கினி
  • சிவனும் இப்படித்தான் இருக்கிறான்
  • சிவன் என் சற்குரு
49
என்ன படித்தாலும் – அகப்பேய் – எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே – அகப்பேய் – சும்மா இருந்துவிடு
  • நீ என்ன படித்தாலும் அது நான் சொல்வது போல் இருக்காது
  • நான் சொல்வதைக் கேட்டுச் சும்மா இருந்தவிடு
50
காடும் மலையுமடி – அகப்பேய் – கடுந்தவம் ஆனால் என்
வீடும் வெளியாமோ – அகப்பேய் –மெய்யாக வேண்டாவோ
  • காடு மலைகளில் தவம் இருந்தால் வீடு தென்படுமா
  • நீ போலி நினைப்புகளை விட்டுவிட்டு உண்மையாக நடக்கும் நினைப்புகளைக் கொள்ளவேண்டாமா?
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 50 / 90

No comments:

Post a Comment