நினைப்புப் பேயே
கேள்
26
யோகம் ஆகாதே - அகப்பேய் – உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி - அகப்பேய் – தேடாது சொன்னேனே
- யோகம் உடலுக்குப் பயிற்சி
- உள்பொருளைக் காணல் உடல்ஞானம்
27
ஐந்தலை நாகமடி – அகப்பேய் – ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் – அகப்பேய் – எம் இறை கண்டாயே
- ஐம்புலனும் ஐந்து தலை நாகம்
- இதன் விடத்தை நீக்குபவன் இறைவன்
28
இறைவன் என்ற தெல்லாம் – அகப்பேய் – எந்த விதமாகும்
அறைய நீ கேளாய் – அகப்பேய் – ஆனந்த மானதடி
- இறைவன் எப்படி இப்பான்?
- ஆனந்த நிலையில் இருப்பான்
29
கண்டு கொண்டேனே – அகப்பேய் – காதல் கொண்டேனே
உண்டு கொண்டேனே – அகப்பேய் – உள்ளது சொன்னாயே
- இறைவன் ஆனந்தம் என்று கண்டுகொண்டேன்
- ஆனந்தம் பெறக் காதல் கொண்டேன்
30
உள்ளது சொன்னாலும் – அகப்பேய் – உன்னாலே காண்பாயே
கள்ளமுந் நீராதே – அகப்பேய் – கண்டார்க்குக் காமமடி
- நான் சொன்னாலும் நீதான் ஆனந்தம் காண வேண்டும்
- காமமே ஆனந்தம்
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 30 / 90
No comments:
Post a Comment