Pages

Thursday, 16 April 2026

சமயம் என்பது ஒரு நினவு - Religion is one's own perception.

நினைப்புப் பேயே
கேள்
 
21
எத்தனை சொன்னாலும் - அகப்பேய் – என் மனந் தேறாதே
சித்தும் மசித்தும் விட்டே - அகப்பேய் – சேர்த்து நீ காண் பாயே
  • எத்தனைச் செய்திகளை எத்தனை முறை சொன்னாலும் நினைவில் நிற்கவில்லை
  • எது சித்து, எது அசித்து என்றுகூட உனக்குத் தெரியவில்லை
22
சமய மாறுமடி - அகப்பேய் – தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம் - அகப்பேய் – ஆராய்ந்து சொல்வாயே
  • ஆறு சமயங்களும் அவரவர் நினைவுகளால் தோன்றின
23
ஆறாரும் ஆகுமடி - அகப்பேய் – ஆகாது சொன்னேனே
வேறே உண்டானால் - அகப்பேய் – மெய்யது சொல்வாயே
  • ஆர் சொன்னாலும் அது ஆறுதான் (ஒரு வகை வழிதான்)
  • அது சமயம் ஆகாது
  • வேறு ஏதாவது உனக்குத் தெரிந்திருந்தால் சொல்
24
உன்னை அறிந்தக்கால் - அகப்பேய் - ஒன்றையும் சேராயே
உன்னை அறியும் வகை - அகப்பேய் – உள்ளது சொல்வேனே.
  • உன்னை நீ தெரிந்துகொண்டால் எந்தச் சமயத்தோடும் சேரமாட்டாய் 
  • உன்னை நீ அறிந்துகொள்ளும் வழியைச் சொல்லுகிறேன்
25
சரியை ஆகாதே - அகப்பேய் – சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் - அகப்பேய் – கிட்டுவது ஒன்றுமில்லை
  • சரியை செய்யாமல் சாலோகம் கண்டாய்
  • கிரியைச் சடங்குகள் செய்வதால் எந்தப் பலனும் இல்லை
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 25 / 90

No comments:

Post a Comment