நினைப்புப் பேயே
கேள்
16
வன்னம் புவனமடி - அகப்பேய் – மந்திர தந்திரமும்
இன்னமும் சொல்வேனே - அகப்பேய் – இம்மென்று கேட்பாயே
- (வன்னம் என்னும் சொல் கோலத்தைக் குறிக்கும்
- கோலம் - அழகு
- அலங்கோலம் - அழகு கலைந்த நிலை)
- (வண்ணம் - நிறம்)
- உலகம் அழகிய கோலத்துடன் திகழ்கிறது
- மந்திர தந்திரங்களால் இயங்குகிறது.
- இவற்றைப் பற்றியெல்லாம் சொல்கிறேன்
- கேள்
17
அத்தி வரை வாடி - அகப்பேய் – ஐம்பத்தோர் அட்சரமும்
மித்தையாங் கண்டாயே - அகப்பேய் – மெய்யென்று நம்பாதே
- அத்து < அத்தி
- சத்து < சத்தி (ஒப்புநோக்குக)
- நினைவே! கடைசி வரையில் என்னுடன் வா
- வடமொழி எழுத்துகள் 51
- இவை மித்தை (மாயை)
- இந்த எழுத்துக்களால் அமைந்த வேதத்தை மெய் என்று நம்பாதே.
18
தத்துவம் ஆனதடி - அகப்பேய் – சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே - அகப்பேய் – பூத வடிவலவோ
- ஐம்பூதங்களில் பாயும் புத்திதான் தத்துவம்
19
இந்த விதங்களெல்லாம் - அகப்பேய் – எம்இறை அல்லவடி
அந்த விதம் வேறே - அகப்பேய் – ஆராய்ந்து காணாயோ
- ஐம்பூதம், அவற்றின் புத்தி - இவற்றில் இறைவன் இல்லை
- இறைவன் இருப்பு-நிலை வேறு
- இதனை ஆராய்ந்து கண்டுகொள்
20
பாவந் தீரவென்றால் - அகப்பேய் – பாவிக்க லாகாதே
சாவதும் இல்லையடி - அகப்பேய் – சற்குரு பாதமடி
- நினைவே!
- நீ செய்த பாவம் தீரவேண்டும் என்றால் எதையும் பாவிக்கக் கூடாது
- குருவின் திருவடி உன்னை விட்டுவிட்டுச் சாவதில்லை.
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 20 / 90
No comments:
Post a Comment