நினைப்புப் பேயே
கேள்
11
பிருதிவி பொன்னிறமே - அகப்பேய் – பேதமை அல்லவடி
உருவது நீரடியோ - அகப்பேய் – உள்ளது வெள்ளையடி
- மண் பொன் நிறம்
- மண் ஏதும் அறியாத ஒன்று அன்று
- (மிதக்க, மூழ்க - வைக்கும்)
- நீர் உருப்பொருள்
- அதன் நிறம் வெள்ளை
- (பனிக்கட்டியாக மாறும்போது இதனை அறியலாம்)
12
தேயு செம்மையடி - அகப்பேய் – திடனது கண்டாயே
வாயு நீலமடி - அகப்பேய் – வான்பொருள் சொல்வேனே
- தேயு என்னும் அழுத்தமான காற்று சிவப்பு நிறம்
- (நெருப்பு பற்றி எரியும்போது பார்)
- வாயு என்னும் மெல்லிய காற்று நீல நிறம்
- இரவில் வானத்தைப் பார்
13
வான மஞ்சடியோ - அகப்பேய் – வந்தது நீ கேளாய்
ஊனமது ஆகாதே - அகப்பேய் – உள்ளது சொன்னேனே
- வானம் மஞ்சள் நிறம்
- (பகலில் வானத்தைப் பார்)
- நான் சொன்னதில் குறை ஏதும் இல்லை
- உள்ளதைத்தான் சொன்னேன்
14
அகாரம் இத்தனையும் - அகப்பேய் – அங்கென்று எழுந்ததடி
உகாரங் கூடியடி - அகப்பேய் - உருவாகி வந்ததடி
- அ - ஒலி
- அங்காப்பின் தோற்ற நிலை
- அது எழுந்தது
- (இ - என விரிந்தது)
- (உ எனக் குவிந்தது)
- உ - ஒலி
- அ+உ [ஒ] < [ஓ] ஆயிற்று
- அ - அவன் - இறை
- உ - உயிர்
- ம் - மெய்
- ஓம் - உருத்தோற்றம்
15
மகார மாயையடி - அகப்பேய் – மலமது சொன்னேனே
சிகார மூலமடி - அகப்பேய் – சிந்தித்துக் கொள்வாயே
- ம் - இது மாயை
- ம் - மலம்
- சி - சிவன் (மூலம்)
- சி - சிந்தனை (மூலம்)
- இவற்றைச் சிந்தித்துக்கொள்
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 15 / 90
No comments:
Post a Comment