Pages

Thursday, 16 April 2026

துடிப்பு இயக்கமாயிற்று - The pulse became motion.

நினைப்புப் பேயே
கேள்

 6
வாக்காதி ஐந்தடியோ - அகப்பேய் – வந்த வகாகேளாய்
ஒக்கம் அதானடி - அகப்பேய் - உண்மையது அல்லவடி
  • வாக்கு முதலான புலன்கள் ஐந்து
  • அவை உணர்வுகளின் ஓக்கம் (மேம்பாடு)
  • இவை நினைவு அன்று
  • போலி உணர்வு
7
சத்தா தி ஐந்தடியோ - அகப்பேய் – சாத்திரம் ஆனதடி
மித்தையும் ஆகுமடி - அகப்பேய் – மெய்யது சொன்னேனே
  • சத்து முதலானவை ஐந்து
  • இதனைச் சாத்திரங்கள் சொல்கின்றன
  • அவை மித்தை (மாயை)
  • மித்தைதான் உண்மை
8
வானாதி ஐந்தடியோ - அகப்பேய் – வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி - அகப்பேய் – திடன் இது கண்டாயே
  • வானம் முதலானவை ஐந்து
  • அவை ஐம்பூதங்கள்
  • அவை இறைவனின் வளங்கள்
  • இவை உறுதியானவை
9
காரணம் ஆனதெல்லாம் - அகப்பேய் - கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே - அகப்பேய் - வந்த விதங்கள் எல்லாம்
  • நான் சொன்னவை காரணங்கள்
  • நான் கண்டவை
  • இவை மாரணம் (இயக்கத் துடிப்புகள்)
  • இயக்கத் துடிப்புகளால் அனைத்தும் தோன்றின
10
ஆறு தத்துவமும் - அகப்பேய் – ஆமகஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும் - அகப்பேய் – வந்தது மூன்றடியே
  • தத்துவம் ஆறு
  • ஆகமங்கள் இப்படிச் சொல்கின்றன
  • நமக்கென்று வந்தவை மூன்று மலங்களே 
  • இவை மாறாத மண்டலங்கள்
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரை -- 10 / 90

No comments:

Post a Comment