Pages

Thursday, 16 April 2026

வேதம் முத்தி அன்று - The Vedas are not Liberation.

நினைப்புப் பேயே
கேள்

1
நஞ்சுண்ண வேண்டாவே – அகப்பேய் – நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே –அகப்பேய் – நீ ஒன்றும் சொல்லாதே
  • சிவன் நஞ்சை உண்டான். அவன் அடிகளைப் பெற, நஞ்சமே! நீ நஞ்சு  உண்ணவேண்டியதில்லை
2
பராபர மானதடி – அகப்பேய் - பரவையாய் வந்ததடி
தராதலம் ஏழ்புவியும் - அகப்பேய் - தானே படைத்ததடி
  • அவன் பராபரம்
  • பரவை (கடல்)
  • தராதலம் (உலகம்) 7
  • அனைத்தையும் அவன் படைத்தான்
3
நாத வேதமடி - அகப்பேய் – நன் நடம் கண்டாயோ
பாதஞ் சத்தியடி - அகப்பேய் – பரவிந்து நாதமடி
  • அவனுடைய நாதம் வேதம்
  • வேத ஒலி எழுப்பிப்பொண்டு நடனம் ஆடுகிறான்
  • அவனுடைய பாதம் சத்தி
  • அது பர விந்துநாதம்
4
விந்து நாதமடி - அகப்பேய் – மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும் பூதம் - அகப்பேய் – அதனிடம் ஆனதடி
  • அவன் விந்துநாதத்திலிருந்து ஐம்பெரும் பூதங்கள் தோன்றின.
5
நாலு பாதமடி - அகப்பேய் – நன்னெறி கண்டாயே
மூல மான தல்லால் - அகப்பேய் – முத்தி அல்லவடி
  • நாலு வேதமும் அவனுக்குப் பாதம்
  • அவை நன்னெறிக்கு மூலம்
  • அவை வெறும் மூலம் மட்டுமே
  • அவற்றால் முத்தி பெறமுடியாது
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் - அகம் என்னும் தன் நெஞ்சப் பேயைத் தானே விளித்துத் தனக்குக் கூறும் அறிவுரையாகப் பிறருக்குக் கூறுவது -- 5 / 90

No comments:

Post a Comment