Pages

Wednesday, 15 April 2026

திரு என்றால் என்ன (திருக்குறள்) - What is 'Thiru'? (Thirukkural)

திரு என்றால் என்ன 


திரு என்னும் சொல் யாவரும் விரும்பும் தன்மையை உணர்த்தும்,
இச்சொல் திருக்குறளில் என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பதைப்  பார்க்கலாம்.

கவலை இல்லாமை 
  • நன்று அறிவாரின் கயவர் திரு உடையார் நெஞ்சத்து அவலம் இலர்
செல்வம்
  • அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று தீ உழி உய்த்துவிடும் 
  • வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக நினைப்பானை நீங்கும் திரு 
  • ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் பேர் அறிவாளன் திரு 
  • இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு தெள்ளியர் ஆதலும் வேறு 
  • நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்-கண் பட்ட திரு 
  • இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி சீறின் சிறுகும் திரு 
  • இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும் திரு நீக்கப்பட்டார் தொடர்பு 
  • முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்
  • பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை தீராமை ஆர்க்கும் கயிறு
அழகு
  •  கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல் நல்லவர் நாணு பிற
  • கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் திரு_நுதற்கு இல்லை இடம் 
மனநலம்
  • நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் நெஞ்சத்து அவலம் இலர் 
திருமகள்
செய்யவள் (திருமகள்)
  • அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்

No comments:

Post a Comment