Pages
▼
மன அலை மோதித் திரும்பும் The waves of the mind surge and recede.
- சத்திநிபாதம் மேவின் முத்தர் ஆவர்.
- சங்கரனோடு உடன் உறைவர். -- 281
0
- சங்கரன் அறிவுதனை அருளினான்
- அவனோடு நாம் குழைந்திருக்கும்போது பிரபஞ்சம் எல்லாம் அவனாகவும், அவன் அல்லனாகவும் தோன்றுவான். -- 282
0
- சங்கரனைப் பூசித்தால் புண்ணிய பாவம் நீங்கி முத்தி பெறலாம். -- 283
0
- சிவனை நிட்டையில் அறிவுறக்கம் செய்பவருக்கு
- நன்மை தீமை
- சீலம்
- தவம்
- விரதம்
- போன்ற எதுவும் வேண்டியதில்லை. -- 284
0
- இடம், காலம், திசை, இருக்கை - எதுவும் இல்லாமல் மனம் ஊஞ்சலாடும்; உலாவும்.
- இதனை உறங்க வைக்க வேண்டும்
- உணர்வுதான் அதற்கு உணவு.
- அதனைப் பட்டினி போட நம்மால் முடியாது.
- சினம், ஆசை என்னும் அதன் செல்வங்களை வறுமையாக்க நம்மால் முடியாது.
- சினம், ஆசை என்னும் உணர்வுகளை விட்ட ஞானிகளால்தான் அரனடி சேர முடியும். -- 285
0
- நினைவுகளை அடக்க வேண்டும்.
- அதற்கு ஒரு குறியிடம் வேண்டும்.
- குறியிடம் காட்டக் குரு வேண்டும்.
- துரியாதீத சாக்கிரத்தில் (சிவமுனை விழிப்புணர்வில்) நினைவு குவிய வேண்டும். -- 286
0
- இதுதான் தவம்; பாக்கியம்;
- இதனை இம்மையிலேயே பெற வேண்டும்.
- பெண்ணின்பத்திலும் சிவனின்பம் காணவேண்டும். -- 287
0
- காம இன்பம் எப்படி இருக்கும் வாயால் சொல்ல முடியாது.
- இவனின்பமும் அப்படித்தான். -- 288
- The nature of sexual pleasure cannot be described in words.
- His happiness, too, is just like that.
0
- வெளியில் இருக்கும் பல நிறங்களையும் படிகம் காட்டும்.
- அந்த நிறங்களைத் தன்னுடையது என்று படிகம் உரிமை கொண்டாட முடியுமா?
- நம் மனம் படிகம் போன்றது.
- மனம் கரையில் மோதும் அலை போல் திரும்பும்.
- சிவத்தில் மோதிய அலை திரும்பாது. -- 289
0
- சிவன் எங்கே என்னவாக இருக்கிறான்?
- இந்த நினைவு வேண்டாம்.
- எங்கேயும் இல்லை;
- என்னிலிருந்து வேறுபட்டவனாக இல்லை.
- அவன் ஆன்மா
- ஆன்மாவைக் காணமுடியாது.
- விழியில் தெரியும் பார்வை ஆன்மா -- 290
0
- குழி நீரில் இருக்கும் பாசான் கை தொட்டால் விலகுவது போல், சிவனடி நினைவு நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களை விலக்கும். -- 291
0
No comments:
Post a Comment