Pages

Tuesday, 14 April 2026

உயிரை உயிரால் பார்க்க முடியாது - the soul cannot perceive the soul

ஒன்பதாஞ் சூத்திரம்   

  • பாச ஞானம் என்பது உலகியல் அறிவு
  • பசு ஞானம் என்பது உயிர் பற்றிய அறிவு
  • பதி ஞானம் என்பது இறை பற்றிய அறிவு 
  • இவற்றோடு மனம் எதையோ தேடி அலைகிறது 
  • எந்த நிழலிலும் நிற்கவில்லை 
  • ஆசை என்னும் பேய்த்தேரில் ஏறிக்கொண்டு அலைகிறது 
  • ஐந்தெழுத்து என்னும் பிடிப்பு கிடைத்தவுடன் அதனைப் பற்றிக்கொண்டு மனம் தங்கிக்கொள்கிறது. -- 292
0
  • வேதம், சாத்திரம், மனு எழுதிய மிருதி என்னும் நெறிநூல், புராணம், கலைஞானம் - முதலானவற்றில் எல்லாம் தேடி அலையாமல், பதி பசு பாசம் பற்றிக் கூறி, சிவன் இயல்பை உணர்த்துகிறேன் - என்கிறார் ஆசிரியர். -- 293
0
  • சடங்குகளிலிருந்து விடுபட்டு முத்தி பெறவேண்டும் 
  • பசு ஞானம் என்பது உயிர் பற்றிய அறிவு 
  • உடலின் இயக்கத்தால் இது உணரப்படுகிறது. -- 294
0
  • செயல், வாக்கு, சிந்தை - எதனாலும் சிவனை அணுக முடியாது 
  • அவன் உடலாகவும், அறிவாகவும் இருந்து தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறான். -- 295
0
  • கண் பிறவற்றைப் பார்க்கும்
  • தன் கண்ணைத் தன்னால் பார்க்க முடியாது. 
  • அப்படித்தான் உயிரை உயிரால் பார்க்க முடியாது -- 296
    • The eye perceives other things;
    • yet, it cannot see itself.
    • In the same way, the soul cannot perceive the soul.
0
  • சிவன் தனக்கென எந்தக் குணமும் இல்லாதவன். 
  • அவனை யாராலும் நினைக்க முடியாது. 
  • எதுவும் இல்லாதவன். 
  • அருள் தருபவன். - 297
0
  • *நான்* என்னும் உணர்வு அகன்ற பின்பும் அவனைக் காண முடியவில்லை 
  • நான் அவன் இல்லை
  • ஆனால் அவன் என்னில் இருக்கிறான் -- 298
    • I am not him,
    • but he is within me.
0
  • சூரியனை மறைக்கும் பூமி-நிழல் போல *சிவாயநம* என்னும் ஐந்தெழுத்து சிவனைக் காட்டும். -- 299
0
  • சத்தி மேலோங்கின் சதாசிவத்தைப் பார்க்கலாம். -- 300
0
  • மலரில் மணம்
  • எரியில் புகை
  • தெரிவது போல, சிவனைக் காணவேண்டும். -- 301
    • Just as fragrance is perceived in a flower,
    • and smoke in a fire,
    • so too must one perceive Shiva.
0
  • பூக்களைப் பறிக்காமல், உதிர்ந்த மலர்களைக் கொண்டு பூசை செய்ய வேண்டும். -- 302
0
  • விறக்கில் தீ போல
  • பாலில் நெய் போல
  • பழத்தில் சுவை போல - இறைவன் இருக்கிறான். 
  • காய்ச்சிய இரும்பு போல் நம் உடலில் இருக்கிறான். -- 303
    • He resides within our body like heated iron.
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  சாதனவியல் ஒன்பதாஞ் சூத்திரம் --- பாடல் 303 முடிய   

No comments:

Post a Comment