தமிழ்வளம், தமிழர் வாழ்வியல் காட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல், முந்நூறுக்கு மேற்பட்ட நூல்கள் - விளக்கம்
Pages
▼
Tuesday, 14 April 2026
வினைத்தாக்கம் இல்லை No reaction
பயனியல் பத்தாஞ் சூத்திரம்
0
சிவனுக்குத் தொண்டு செய்துகொண்டு வாழ்பவனால் பிறருக்கு இன்பமோ துன்பமோ நேர்ந்தால் அது அவன் வினைப்பதிவில் ஏறாது.
சிவத்தொண்டே பதிவில் ஏறும்படி சிவன் மாற்றிக்கொள்வான். -- 304
0
எதையும் "என் செயல்" என்று சொல்லாமல் "தன் (அவன்) செயல்" என்று அவன் நினைப்பதால், சிவனடியாருக்குச் செய்வினைப் மதிவு இல்லை. -- 305
0
என் புலன்கள் என் வசம் இல்லை. புலன்களைப் படைத்தவன் வழியில் அவை செல்கின்றன - என்று சிவனை அவன் நினைக்கிறான். இதனால் அவன் செயல்கள் சிவனுடையவை ஆகிவிடுகின்றன. -- 306
0
அவன் நினைவில் குறைபாடு இல்லாதவன். அவனால் பிறருக்குத் தீமை விளைந்தால், அது தீமை அடைந்தவனின் வினைப்பயன். -- 307
0
நாடு, காடு, மலைக்குகை - போன்ற இடங்களில் தவம் செய்பவர்
மகளிர் இன்பத்தில் கிடந்நதாலும்
சிவனடி நினைவிலேயே இருப்பர். -- 308
0
மருந்து தந்திரம் உடையவர்க்கு விடம் ஏறாது.
அதுபோல, சிவன் நினைவில் இருப்பவர்க்கு வினைத்தாக்கம் இல்லை. -- 309
0
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம் - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பயனியல் பத்தாஞ் சூத்திரம் --- பாடல் 309 முடிய
No comments:
Post a Comment