Pages

Wednesday, 15 April 2026

ஆணவத்துக்கு முடிவே கிடையாது There is no end to arrogance.

பதினொராஞ் சூத்திரம்   

0
  • சித்தன் ஆன்மா ஈசன் உயிரைக் காணும். 
  • அன்பு செய்யும் அறிவினைக் கொண்டவன் சித்தன். 
  • இவன் மாயை நீங்கி, சிவனை மருவுவான். -- 310
0
  • பரஞானம் என்பது தன் பரனைக் காண்பது. 
  • அது பதார்த்தங்களைப் பார்க்காது. 
  • அஞ்ஞானம், வாச்சிய வாசக ஞானம் போன்ற ஞானங்களை விட்டுவிட்டு சிவஞானத்தில் நிலைகொண்டிருக்கும். 311
0
  • உடம்பு இருந்தால் ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் இருக்கத்தான் செய்யும். 
  • ஞானத்துக்கு மலம் வேண்டியதில்லை. 
  • ஞானம் இருந்தால் சிவனிடம் இருக்கலாம். -- 312
0
  • மெய்ஞ்ஞானம் வந்ததும் சிவம் பிரகாசிக்கும். 
  • சீவன் முத்தன் ஆகும். 
  • காயம் திரியும். -- 313
0
  • ஆணவத்துக்கு முடிவே கிடையாது. 
  • செம்பில் களிம்பு போல் ஒட்டிக்கொள்ளும். 
  • சுத்தன் ஆனால் முத்தன் அருளைப் பெறலாம். -- 314
0
  • நெல்லுடன் இருக்கும் தவிடும் உமியும் அநாதி. 
  • அரிசியில் இவை இல்லை. 
  • அரிசி முளைக்க அவை வேண்டும்.
  • அதுபோல
  • சிவனை நினைக்க மும்மலம் உதவும். -- 315
0
  • எவ்விடத்தும் இறைவன் அடி
  • இறைவன் உயிர்களின் தலைவன்
  • அகர ஒலிபோல் முதல்வன் -- 316
0
  • குருடனுக்கு சூரிய ஒளியும் இருள். 
  • நாம் இறைவனைப் பார்க்கும் அறிவுக்கண் இல்லாதவர். -- 317
0
  • சிவன் நிழலாக என் உயிர் இருக்கட்டும் 
  • நீரொடு நீர் சேர்ந்தாற்போல் என் நினைவு சிவனிடம் இருக்கட்டும் -- 318
0
  • களிம்பு போன செம்பு செம்பொன் போலத் தோன்றும். 
  • என் உயிரும் அப்படித் தோன்றும். -- 319
0
  • சிவன், சீவன் இரண்டும் ஒன்றன்று.
  • சிவன் முத்தியின்பம் தருவான். 
  • சீவன் புலனின்பமே தரும். -- 320
0
  • இரும்பைக் காந்தம் இழுக்கும்.
  • எரியும் இரும்பை இழுக்குமா? 
  • சீவன் இரும்பு
  • சிவன் எரியிரும்பு போன்றவன் -- 321
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்   பயனியல்   பதினோராம் சூத்திரம் --- பாடல் 321 முடிய   

இறைவன் காயந்த நிலையில் இருக்கும் இரும்பு


No comments:

Post a Comment