Pages

Wednesday, 15 April 2026

இறைவன் நம்மைச் சமைக்கும் தீ - God is the fire that cooks us.

பன்னிரண்டாஞ் சூத்திரம்   

  • மும்மலங்கள் இறைவன் தாளைச் சேர விடுவதில்லை
  • அவற்றை அறுக்க வேண்டும்
  • சிவனடியாரோடு சேர்ந்துகொள்ள வேண்டும்
  • ஆலயங்களை அரன் என்று நினைத்துத் தொழவேண்டும்
  • அடியாருடன் ஆடிப் பாட வேண்டும் 
  • இதுதான் சிவஞானம். -- 322
0
  • ஈசன் மாட்டு அன்பு இல்லாதவர் யார் மாட்டும் அன்பு இல்லாதவர் ஆவர்
  • எந்த உயிர் மாட்டும் அன்பு இல்லாதவர் 
  • தன் மாட்டும் அன்பு இல்லாதவர் 
  • அவர்கள் அறிவில்லாப் பிணங்கள் 
  • அவர்கள் பிறந்தாலும் இறந்தாலும் பிணக்குதான்
  • அவர்களை ஒதுக்கித் தள்ளிவிடுங்கள். 
  • அடியார்க்குத் தொண்டு செய்வதைக் கடமையாகக் கொள்ளுங்கள் 
  • அருள்ஞானக் குறியில் கூத்தாடுங்கள் -- 323
0
  • உடல், உயிர், அறிவு - அனைத்தும் சிவன் அருள் 
  • சிவனடியாரிடம் பாசம் காட்டித் தொழுதிடுங்கள் -- 324
0
  • விறகில் எரி போல் இறைவன் தோன்றுவான் 
  • அவரவர் விரும்பும் வடிவில் தோன்றுவான்
  • தாய் குழந்தைக்குப் பால் தருவது போல் அருள் தருவான் -- 325
0
  • ஞானம், யோகம், கிரியை, சரியை - நான்கிலும் இறைவன் உள்ளான்
  • அவனே ஞானகுரு -- 326
0
  • மந்திரம், மருந்து, யோகம் - அவன்
  • அணிமா முதலான கலைகளில் வல்ல ஆசான் ஈசனைக் காட்டுவான். -- 327
0
  • பரம்பிரமம்
  • பரசிவன்
  • பரஞானம்
  • பராபரன்
  • என்று எண்ணி அருள் குருவை வழிபடுவோமாக. -- 328
0

சிவஞானசித்தியார் சுபக்கம் முற்றிற்று

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்   பயனியல்  பன்னிரண்டாம் சூத்திரம் --- பாடல் 328 முடிய   

இறைவன் விறகில் தீயினன் 

No comments:

Post a Comment