Pages
▼
ஆன்மா உணர்ச்சியோ அறிவோ மட்டும் அன்று The soul is neither mere emotion nor mere intellect
ஆன்மா
- ஆன்மா அருவமும் உருவமும் பெற்றிருக்கும் தன்மையதாக ஆவது இல்லை.
- எந்தப் புலனாலும் காணமுடியாத அருவத் தன்மையைத்தான் பெற்றிருக்கும்.
- தீ போன்றது அன்று. -- 201
0
- ஆன்மா
- நிலா போன்று வளர்ந்து தேய்வதும் அன்று -- 202
0
- ஆன்மா
- ஆகாயம் போலத் தெரியாததும் அன்று.
- உருவோடு ஒட்டிக்கொண்டு தன்னைப் புலப்படுத்துவது. -- 203
0
- ஆன்மா
- அசித்து போல் உணர்ச்சி இல்லாதது அன்று
- சித்து போல் வெறும் உணர்ச்சியும் அன்று.
- அறிவு என்னும் சித்தைப் பெற்றிருக்கும் அசித்து. -- 204
0
- உயிரை அணு என்று சொல்ல முடியாது.
- அணுவுக்கு எடை உண்டு.
- உயிருக்கு எடை இல்லை. -- 205
0
- உடல் முழுவதும் உயிர் பரவியிருக்கிறது என்றும் சொல்வதற்கில்லை.
- சில உறுப்புகளை இழந்த பின்னரும் உயிர் இருக்கிறது. -- 206
0
- உயிரை வெறும் உணர்ச்சி என்றோ, அறிவு என்றோ சொல்வதற்கில்லை.
- உறங்கும்போது நல்லுணர்வும், நனவறிவும் இல்லையே -- 207
0
- உயிர் உடலெங்கும் பரவியிருகிறது என்றும் சொல்வதற்கில்லை.
- எல்லாப் புலனுணர்வும் எல்லா இடங்களிலும் இல்லையே -- 208
0
- ஆன்மா சுத்தமானது. அதனை உடல் மறைக்கிறது என்றும் சொல்வதற்கில்லை.
- செயல்க்களின் வழியே ஆன்மாவுக்கு ஞானம் பிறக்கிறது
- வீடுபேறு விரும்புகிறது. -- 209
0
- ஆன்மா பசுத்துவம் (பாசம்) பெற்ற பசு.
- The Soul is a *Pasu* (bound entity) that has acquired the state of *Pasutvam* (bondage).
- ஆன்மா அநாதியை மறைத்து நிற்கும். -- 210
0
No comments:
Post a Comment