Pages
▼
புண்ணிய பாவங்கள் ஆன்மாவுக்கு உணவு Merit and sin are food for the soul
ஆன்மா
- மாயை வயிற்றில் வளர்ந்த பிள்ளை
- ஞானம், இச்சை, பகை மூன்றும் ஒன்றாய்க் கொண்டது.
- உடம்பில் இருப்பது -- 211
0
- ஆன்மாவுக்குச் சூக்கும உடல்
- ஆன்மா தூல உடம்பில் இருக்கும்
- உடம்புக்குள் வரும். உடம்பிலிருந்து போய்விடும்.
- உடம்பு செய்யும் புண்ணிய பாவங்கள் ஆன்மாவுக்கு உணவு -- 212
0
- ஆன்மா
- உடலின் அகம் மற்றும் புறம்.
- ஆன்மாவின் முதற்காரணம் மாயை -- 213
0
- தோல், மரப் பொம்மைகளை ஆட்டுபவன் போலவும்
- தேரை ஓட்டுபவன் போலவும்
- அன்மா உடலை ஆட்டுவிக்கும். -- 214
0
- என் உடலுக்குப் பொறி என் பிராணன் என்னும் உயிர்.
- கரணம் என்னும் சடங்கு உடலுணர்வு.
- இந்தக் கட்டுக்குள் உடலிலுள்ள மயிர், நகம் போன்றவற்றைக் கொள்ள முடியாதே -- 215
0
- ஆடை அணிகலன்களை என்னுடையவை, உன்னுடையவை என்கிறோம்.
- அப்படித்தான் என் உயிருக்கு என் உடம்பு. -- 216
0
- என் உயிர் என்கிறோம்
- அந்த உயிரைக் கண்டதில்லை. -- 217
0
- புத்தியை மனம் என்றும், மனத்தைப் புத்தி என்றும்
- சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்
- முந்தனை ஆன்மா என்றும், ஆன்மாவை முந்தன் என்றும்
- சொல்லி
- ஆன்மா எனக்குள் வரும், என்னிடமிருந்து போகும் என்றால், உன் ஆன்மா உன்னுடையது அன்று - அல்லவா -- 218
0
- அறிவாகிய உடலை
- சிந்தையாகிய ஆன்மா அணைதலால்
- ஆன்மா என்கிறோம்.
- எரியும் சுடரையும், சுடர் இருக்கும் இடத்தையும் விளக்கு என்பது போல் ஆன்மாவைக் குறிப்பிடுகிறோம்.
- பொறிபுலன் அறிவது ஆன்மா. -- 219
0
- புருடன் என்பது ஆன்மா.
- அதற்கு வினைப்பதிவு உண்டு.
- அது இருக்க உடல் வேண்டும்.
- உடல் இருக்க உணவு வேண்டும்
- உணவுக்கு உழைப்பு வேண்டும்
- உழைக்க உறக்கம் வேண்டும். -- 220
0
No comments:
Post a Comment