Pages

Sunday, 12 April 2026

அறிவன் One who rules for God

புருடன்  யார் 
  • ஆறிவன், 
  • புலனறிவு தருபவன்.
  • பொருளின் உருப்பதிவு கொண்டவன்
  • மலத்தில் மறைந்து நிற்பவன்
  • அரு உருவம் கொண்டவன் 
  • அரசனுக்கு அமைச்சன் போல் இறைவனுக்காக ஆள்பவன். -- 221
0
  • படையுடன் சென்ற மன்னன் இல்லம் திரும்பும்போது,  
  • படையை வெளியே நிறுத்திவிட்டு
  • தன் இருப்புக்குக் காவல் செய்துகொண்டு 
  • இல்லம் புகுவான். 
  • அதுபோல 
  • ஆன்மா என்னும் அறிவு
  • ஐம்புலப் பதிவுகளைக் காவலாக்கிக்கொண்டு
  • அந்தப்புரத்தில் இருக்கும்.  -- 222
0
  • சாக்கிரம் 35-ல் 
  • சாக்கிரம் 25
  • சுழுமுனை, இதயம், துரியம், நாபி, துரியாதீதம், மூலாதாரம் ஆகியவற்றில் 10 விழிப்பு நிலைகள் செயல்படும் -- 223
0
  • சாக்கிரம் என்பது விழிப்புநிலையின் இயல்பு
  • நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது கீழ்நோக்கு-நிலை
  • பிறப்பு அறுத்தலில் கவனம் செலுத்துவது மேல்நோக்கு-நிலை -- 224
0
  • அவத்தை என்பது கவனம் செலுத்தும் விழிப்புணர்வு
  • அவத்தை (5 அவத்தை --- ஆன்ம அவத்தை)
  • 5 அவத்தை செயலில் கவனம் செலுத்தும்
  • ஞான அவத்தை இறையருள் பெற்றுப் பிறப்பறுக்கும் -- 225
0
  • நனவில் 5 அவத்தை செயல்படும்
  • கனவில் 4 அவத்தை செயல்படும்
  • சுழுணையில் 3 அவத்தை செயல்படும்
  • துரிய நினைவில் 2 அவத்தை செயல்படும்
  • துரியாதீத நினைவில் ஓர் அவத்தை மட்டும் செயல்படும் -- 226
0
  • கேவலம், சகலம், சுத்தம் - என்று அவத்தைகளில் 3 வகை உண்டு. 
  • எதிர்பாராமல் நிகழ்வது - கேவலம்
  • எதிர்பார்க்கும்போது நிகழ்வது - சகலம்
  • இயல்பாக நிகழ்வது - சுத்தம் - 227
0
  • கேவல ஆன்மாவுக்கு அறிவு முதலான ஏதும் இல்லை -- 228
0
  • சகல ஆன்மா எல்லாப் பிறவிகளிலும் பிறந்து உழலும் -- 229
0
  • சுத்த ஆன்மா குருவருள் பெற்றிருக்கும். ஞான யோகத்ததால் மும்மலம் அறுக்கும். சிவனடி சேர்ந்திருக்கும் -- 230
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  இலக்கணவியல் நான்காஞ் சூத்திரம் --- பாடல் 230 முடிய   

சுழுணை (சுழுமுனை)


No comments:

Post a Comment