Pages

Thursday, 9 April 2026

சத்தியின் பதிவே சிவன் Shiva is the very embodiment of energy.

சிவன்
  • ஒருவனே ஒன்றோடொன்று ஒன்றுவதும் ஒன்றாததுமான வேடம் தரித்துக்கொண்டு நிற்கிறான். கொல்கிறான்.  அருள் புரிகிறான். -- 71
0
  • நாயகி நாயகன் கண்களைப் புதைக்க இருள். 
  • புதைத்த கையை எடுக்க ஒளி 
  • என்று நாம் எண்ணிக்கொள்ளலாம். -- 72
0
  • சிவன் யோகத்தில் இருந்தான்
  • அப்போது திருமால் காமனை ஏவினான்
  • சிவன் காமனை எரித்தான் 
  • பெண்ணை அணைத்தான்
  • உயிர்களும் பேரின்பம் துய்த்தன -- 73
0
  • சிவன் படைப்பு முதலான செயல்களைச் செய்கிறான்
  • இடப்பாகம் பெண்ணுக்குக்குக் கொடுத்து உலகை இன்புற வைக்கிறான்
  • யோகியாய் முத்தி தருகிறான் -- 74
0
  • உருமேனியும் அருமேனியும் அருவுரு மேனியும் அவனிடம் கண்டோம்.
  • இம்மூன்றும் கருணை வடிவம். -- 75
0
  • உயிருள்ள மேனி
  • உயிரில்லா மேனி
  • இந்த நிலையும் ‘அத்துவா’ நிலை (இரண்டற்ற நிலை) -- 76
0
  • சிவன் விந்து சிந்தையார்
  • சத்தி அதீதம் (எட்டா இன்பம்) -- 77
0
  • சிவன் புத்தியும் முத்தியும் அளிப்பவன் -- 78
0
  • பஞ்சாட்சர மந்திரம் அவனை அடைய உதவும் தந்திர மந்திரம் -- 79
0
  • சத்தியின் பதிவே சிவன். -- 80

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல், முதற் சூத்திரம் பாடல் 80 முடிய   

No comments:

Post a Comment