Pages

Monday, 13 April 2026

சைவச் சடங்குகள் Shaiva Rituals

சைவச் சடங்குகளை, சைவ சித்தாந்தம் சைவக் கலை என்று கூறுகிறது.

நிலாவின் தோற்றத்தில் கலை வளர்வது போல, சிவனை அடையப் பின்பற்றப்படும் நெறிமுறைகளைக் கூறுவது சைவக்கலை.

சைவ சித்தாந்தத்தில் 5 வகையான கலைநிலைகள் குறிப்பிடப்படுகின்றன.

அவை: 1.நிவர்த்தி -- 2. பிரதிஷ்டா -- 3. வித்யா-- 4. சாந்தி -- 5. சாந்தியாதீதம் - என்பன. 
  1. நிவர்த்தி என்பது செய்த பாவங்களை நீக்கிக்கொள்ளும் சடங்கு.
  2. பிரதிஷ்டா என்பது மந்திரம் சொல்லி, கோயிலில் சிலை வைத்தல். இதனைத் தொல்காப்பியம் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் ஆகிய ஆறும் போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் ஆறு முறைமைகள் என்று கூறுகிறது.
  3. வித்யா என்பது சிவனைப் பற்றிய கல்வியைப் புகட்டல். 
  4. சாந்தி என்பது சினம் கொண்டு அழிக்கும் தெய்வங்களை அமைதிகொள்ளச் செய்தல். 
  5. சாந்தியாதீதம் என்பது ஆன்மா இறைநிலையில் ஒன்றாகும் உச்ச-கட்டம்.
சிவன்


No comments:

Post a Comment