பாலுக்காகப் பசுக்களை வளர்ப்பவன், தன் பசுக்ககளைப் புல்தரையில் மேய விடுவது போல, இறைவன் தனக்கு உதவும் உயிர்களை உலக உடம்பில் மேய விடுகிறான் என்பதே தத்துவம்.
0
மன்னவன் தன் மகன் வேடம் போட்டுக்கொண்டு வளர்கிறான்.
இறைவன் உயிர் வேடத்தில் வளர்கிறான்.
உயிர் தன் இருப்பு தன் தந்தையின் வேடம் என்பதை மறந்துவிடுகிறது.
நம் உயிர் இப்படித்தான் இயங்குகிறது.
இப்பாடலில் ஆசிரியர் தன் குருவை இறைவன் எனக் குறிப்பிடுகிறார். -- 253
0
உலகில் மேயும் பசுவினம் மூன்று வகை.
(1) விஞ்ஞானகலர், (2) பிரலயாகலர், (3) சகலர் - என 3 வகை
பசுவின் மலம் ஆணவம், கன்மம், மாயை - என மூன்று.
முதல் இருவர் - (நிராதாரம்) சார்பின்மை நிலையினைப் பெற்றுத் தனித்தியங்கும் நிலையினைப் பெற்றவர்.
மூன்றாமவர் - (துவிதாசத்திநிபாதம்) இறைவன் அருளைச் சிறிய அளவிலும், பெரிய அளவிலும் பெற்று, இறைவனைச் சார்ந்து வாழ்பவர்.
விஞ்ஞானகலர் - ஆணவமலம் கொண்டவர்
பிரலயாகலர் - ஆணவம், கன்மம் என்னும் இரு மலங்களையும் கொண்டவர்
சகலர் - ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் கொண்ட சராசரி மனிதர். -- 254
0
ஆசான் பாசமானது அருட்பார்வை (நயனதீட்சை) போன்றவற்றால் கிடைக்கும். -- 255
0
பாலர், வாலிபர், விர்த்தர் முதலான நிலைகளில் போகம், வியாதி முதலானவற்றைத் தந்து, இறுதியில் சத்திய நிர்வாணமும் இறைவன் நமக்குத் தருவான். -- 256
0
ஓதி உணர்ந்து ஒழுக்கத்திலிருந்து இழுக்காமல் வாழும் உத்தமர்க்கு இறைவன் உயர்வைத் தருவான். -- 257
0
சடங்கு செய்வது பிரகாசம் தரும். -- 258
0
மந்திரங்கள் முதல் ஐந்தும் கலைகள் -- 259
0
வித்தை மந்திரம் இரண்டு.
தத்துவம் ஏழு -- 260
0
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம் - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் சாதனவியல் எட்டாஞ் சூத்திரம் --- பாடல் 260 முடிய
No comments:
Post a Comment